எல்லைப் பகுதிகளை கண்காணிக்க புதிய முயற்சி.! இந்திய ராணுவம் அதிரடி.! இணையத்தில் வைரலான வீடியோ.!
இப்போது வரும் புதிய தொழில்நுட்ப வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக சில புதிய தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வேலையைக் குறைக்கிறது என்பது தான் உண்மை. இந்நிலையில் எல்லை பகுதிகளைக் கண்காணிக்கப் பறக்கும் ஜெட் பேக்-குகளை வாங்க முடிவுசெய்துள்ளது இந்தியா.
ஆக்ரா
அதாவது எல்லைப் பகுதிகளில் அதன் ஒட்டுமொத்த கண்காணிப்பு மற்றும் போர்த் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் ஜெட்பேக் உடைகளை வாங்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆக்ராவில் இருக்கும் இந்திய ராணுவ வான்வழி பயிற்சிப் பள்ளியில் இந்த சாதனத்தின் (ஜெட் பேக்) செயல் விளக்கம் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது.

குறிப்பாக கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிங் சமீபத்தில் ஆக்ராவில் இருக்கும் நீர்நிலைகள், கட்டிடங்கள் மற்றும் வயல்களின் மீது இந்த ஜெட்பேக்-ன் செயல் திறனை விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜெட் பேக் சூட் என்பது அதை அணிபவரைப் பறக்க வைக்கும் ஒரு அசத்தலான சாதனமாகும். இதற்கு வாயு அல்லது திரவம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இதன் மூலம் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்த செல்ல முடியும். பின்பு விரைவாக ராணுவ வீரர்கள் பயணிக்கவும் இது உதவி செய்யும். தற்போது இதுகுறித்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ வான்வழி பயிற்சி பள்ளி (ஏஏடிஎஸ்)-ல் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் இந்திய ராணுவம் 48 ஜெட் பேக் சூட்களை வாங்குவதற்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 80 பேலோடுடன் பறக்கக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும், பாலைவனம், மலை மற்றும் 3000 மீ உயரம் வரை உயரமான சூழ்நிலைகளில் செயல்படும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அசத்தலான டெமோ
இந்த நிலையில் தான் கிராவிட்டி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ப்ரௌனிங் சமீபத்தில் ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிப் பள்ளியில் இதற்கான டெமோவை அளித்தார். மேலும் இந்திய எல்லைப் பகுதியில் ஏற்படும் பதற்றங்களைத் தவிர்க்கவும், ராணுவத்தின் அவசரக்கால போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் இது பயன்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வீடியோ வைரல்
குறிப்பாக இந்த பயிற்சி வீடியோ சமூக வலைத் தளங்களில் அதிக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதுபோன்ற தொழில்நுட்ப சாதனங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் மனிதர்கள் அணிந்து கொள்ளும் இந்த உடை திரைப்படத்தில் இருப்பது போன்று நிஜத்தில் இருப்பதில்லை. அதைவிட அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது உடல் பகுதியில் காற்றை கீழே தள்ளும் சிறு சிறு அலகுகளைக் கொண்டிருக்கும். பின்பு இதை இயக்கி ராக்கெட்டை போல காற்றை கீழே தள்ளி மனிதன் மேலே பறக்க வேண்டும். குறிப்பாகப் பறக்கும் போது திசை மாற்றுவதற்கும், சுழல்வதற்குத் தனி அமைப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

மேலும் இங்கிலாந்தின் ராயல் நேவி மற்றும் அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸ் ஏற்கனவே இந்த ஜெட் பேக் சூட்களை தங்களது பல கடற்படை செயல்பாடுகளில் பயன்படுத்தி சோதனை செய்து வரும் நிலையில் இந்திய ராணுவமும் ஜெட் பேக் சூட்களை பயன்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








