பாக் பெண் ஸ்பை-யுடன் நெருக்கம்: ரூ.50,000-க்கு வலைத்தளத்தில் ரகசியத்தைப் பகிர்ந்த இராணுவ வீரர்.!
சமூகவலைத்தளங்களில் ராணுவ ரகசியங்களைத் தெரிந்து கொள்ள, சிலர் தங்களை அழகான பெண்கள் என்று காட்டிக்கொண்டு பாகிஸ்தான் உளவாளிகள் வலம் வருவதாக இந்திய ராணுவம் ஏற்கனவே எச்சரித்தது.

ஒருவர் கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் பாகிஸ்தானிற்கு உளவுப் பார்த்த பெண்ணிற்கு அதிமுக்கிய ராணுவ ரகசியங்களை பகிர்ந்து ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புகைப்படங்களைப் பகிர வேண்டாம்
மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் பதிவி, பெயர், அடையாளாம் உள்ளிட்ட எந்த தகவலையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் அறிவுறத்ப்பட்டனர், பின்பு ராணுவ சீருடையில் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என எச்சரித்தது இந்திய ராணுவம்.

கடந்த ஜனவரி மாதம்
குறிப்பாக 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இதுபோன்ற 5சம்பவங்கள் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அவற்றில் நான்கு சம்பவங்கள் ராணுவத்திலும்,ஒன்று விமானப்படையிலும் அரங்கேறியுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப்படையைச் சேர்ந்த உயரதிகாரி
பின்பு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதளப் பக்கத்தில் நட்பு வட்டாரத்திலிருந்த பெண்ணுடன், பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்ததற்கான விமானப்படையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரவீந்தர் என்ற ராணுவ வீரர்
நேற்று முன் தினம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நெர்நௌல் ரயில் நிலையத்தில் ரவீந்தர் என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். இவர் ராணுவத்தின் மிக முக்கியமான ரகசியங்களை சமூக வலைத்தளத்தில் தொடர்பிலிருந்த
பெண்ணுடன் பகிர்ந்து கொண்டதால் இந்த கைது நடவடிக்கை செய்யப்பட்டது.

ரூ.5000 வாங்கியதாகவும் தகவல்
மேலும் நெர்நௌல் ரயில் நிலையத்தில் ரவீந்தர் கொடுத்த தகவலுக்கு அப்பெண்ணிடம் ரூ.5000 வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications