500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள்: இந்தியாவின் சூப்பர் திட்டம்!

|

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் சீன - இந்திய எல்லைப் பகுதியான தவாங்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்திய - சீன எல்லைப் பகுதி

இந்திய - சீன எல்லைப் பகுதி

இதனால் இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பிரளய் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Pralay missiles) வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

2023 New Year Offer-னா இப்படி இருக்கணும்! 5 Phone-கள் மீது 2023 New Year Offer-னா இப்படி இருக்கணும்! 5 Phone-கள் மீது "அடேங்கப்பா" ஆபரை அறிவித்துள்ள Flipkart!

150 முதல் 500 கி.மீ தூரம்

150 முதல் 500 கி.மீ தூரம்

குறிப்பாக இந்த ஏவுகணைகள் மிக விரைவில் தயாரிக்கப்பட்டு இந்திய-சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது. அதேபோல் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை பிரளய் ஏவுகணை 150 முதல் 500 கி.மீ தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது.

அடி தூள்:பிரபலமான 5G ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்த Redmi.! உடனே முந்துங்கள்.!அடி தூள்:பிரபலமான 5G ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்த Redmi.! உடனே முந்துங்கள்.!

புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள்

மேலும் இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணைத் திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதி வச்சுக்கோங்க பொங்கல் பண்டிகைக்கு முன்னாடி எழுதி வச்சுக்கோங்க பொங்கல் பண்டிகைக்கு முன்னாடி "இந்த" போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்! அப்படியென்ன ஸ்பெஷல்?

 கடற்படை தளபதி

கடற்படை தளபதி

சமீபத்தில் கடற்படை தளபதி ஹரி குமார் பேசுகையில், எல்லையில் எதிரிகளை எதிர்கொள்ளப் பெருமளவில் தயாரித்து தயார் நிலையில் வைக்க மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறப்புத் திட்டமே வகுத்திருந்ததாகச் சுட்டிக் காட்டியிருந்தார் எனக் கூறினார். இந்த நிலையில் தான் 120 பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

குறிப்பாக பெண்கள்! Instagram-ல் சாட் செய்யும் போது மறக்காம இந்த Setting-ஐ ஆன் பண்ணிடுங்க! இல்லனா?குறிப்பாக பெண்கள்! Instagram-ல் சாட் செய்யும் போது மறக்காம இந்த Setting-ஐ ஆன் பண்ணிடுங்க! இல்லனா?

கடந்த 20-ம் தேதி..

கடந்த 20-ம் தேதி..

அதேபோல் கடந்த 20-ம் தேதி இரு நாட்டு கவுண்டர்கள் அளவிலான 17வது சுற்றுப் பேச்சுவார்த்தை சுஷுல்-மால்டோ எல்லையில் நடைபெற்றது. அதில் மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடிவு எட்டப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் "இந்தியா - சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை விரைவில் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது.

சபாஷ்! கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர்-க்கும் சேர்த்து ஸ்மார்ட் டிவிக்கு அட்டகாச ஆபர் போட்ட Flipkart.!சபாஷ்! கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர்-க்கும் சேர்த்து ஸ்மார்ட் டிவிக்கு அட்டகாச ஆபர் போட்ட Flipkart.!

சீன பத்திரிகையாளர்கள்

பின்பு சீன பத்திரிகையாளர்கள் மத்தியில் அந்நாட்டு வெளியுறவுத் துறை வாங்க் யீ பேசியது என்னவென்றால், சீனா மற்றும் இந்தியா என இரு நாடுகளும் ராஜதந்திர மற்றும் ராணுவ வழி தொடர்புகளைப் பேணி வருகின்றன. இரு நாடுகளும் எல்லையில் அமைதி நிலவ வேண்டுமென உறுதிகொண்டுள்ளன. இரு நாட்டு உறவுகளின் உறுதியான வளர்ச்சியை உறுதிசெய்ய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

வந்துச்சு, தொட்டேன், க்ளோஸ்.. ரிப்பீட்டு! பரவும் ஸ்பேம் மெசேஜ்.. 9 லட்சம் ரூபாய் இழந்த நபரின் கண்ணீர்!வந்துச்சு, தொட்டேன், க்ளோஸ்.. ரிப்பீட்டு! பரவும் ஸ்பேம் மெசேஜ்.. 9 லட்சம் ரூபாய் இழந்த நபரின் கண்ணீர்!

இந்திய-சீன

குறிப்பாக இந்திய-சீன வீரர்களின் மோதலுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்து மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Indian approves purchase of 120 Pralay missiles: Will be operational soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X