2018 தலை சிறந்த இயக்குநர்கள்: நம்ம சுந்தருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

|

தற்சமயம் சிலிக்கான் வேலியில் இருக்கும் தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக தான் இருக்கிறார்கள், இது அனைத்து நாட்டினரையும் சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

2018 தலை சிறந்த இயக்குநர்கள்: நம்ம சுந்தருக்கு எத்தனையாவது இடம்?

மேலும் சிலிக்கான் வேலியில் வேலை செய்யும் ஒவ்வொரு அமெரிக்கவாசியின் கனவு கூட,ஒரு தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநராக சிறப்பாக செயல்படு வேண்டும் என்பது தான், ஆனாலும் தொடர்சியாக மிகச் சிறந்த நிர்வாகத் திறமையும் இயக்குநர்களாக இந்தியர்கள் தேர்வாகி வருவது மிக, மிக மகிழ்ச்சிiயும் பெருமைiயும் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இயக்குநர்கள்:

சிறந்த இயக்குநர்கள்:

இதற்கு முன்பு அடோப் நிறுவனத்தின் இயக்குநர் சாந்தனு நாராயண், ஹர்மான் இண்டெர்நேசனல் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் பலிவால், மாஸ்டர்கார்ட்ஸ் அஜய் பங்கா ஆகியோர் தலை சிறந்த நிர்வாக இயக்குநர்கள் பட்டியலில் முதலிடம்

பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 தலை சிறந்த இயக்குநர்கள்: முதல் இடம்:

2018 தலை சிறந்த இயக்குநர்கள்: முதல் இடம்:

தற்சமயம் 2018-ம் ஆண்டு சிறந்த நிர்வாக இயக்குநர்களின் பட்டியல் வெளியடப்பட்டது, அதில் மைக்ரோசாப்ட் நிறவனத்தின்

சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்திருக்கிறார்.

இரண்டாவது இடம்:

இரண்டாவது இடம்:

அடுத்து 2018-ம் ஆண்டு சிறந்த நிர்வாக இயக்குநர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தி ஹோம் டிபோட் நிறுவனத்தின் இயக்குநர் க்ரைக் மெனெர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மூன்றாவது இடம்:

மூன்றாவது இடம்:

பின்பு 2018-ம் ஆண்டு சிறந்த நிர்வாக இயக்குநர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த நமது சுந்தர் பிச்சை பெற்றுள்ளார்.

எலோன் மஸ்க்

எலோன் மஸ்க்

மேலும் இயக்குநர்கள் அடங்கிய பட்டியலில், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் 12-வது இடத்திலும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் 14வது இடத்திலும் உள்ளனர்.

மார்க் சூக்கர்பர்க்:

மார்க் சூக்கர்பர்க்:

குறிப்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சூக்கர்பர்க் அவர்கள் 22-வது இடத்திலும், டெல் நிறுவனத்தின் மைக்கேல் டெல் 25-வது இடத்திலும் உள்ளர் என்பது குறிப்பிடத்தகக்து.

10 மில்லியன்

10 மில்லியன்

தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று Comparably.com இணையத்தில்

தரப்படும் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் 50,000 நிறுவனங்களில் வேலை

செய்யும் 10 மில்லியன் நபர்களின் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian-American named best CEO for 2018 in US Check out the top-10 list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X