ஆப்பிள் ஐபோன் புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற இந்தியர்.. பலே..பலே..

|

ஆப்பிள் நிறுவனம் வருடாந்திர ஐபோன் புகைப்பட போட்டியை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர ஐபோன் புகைப்பட போட்டியின் வெற்றியாளர்களை ஆப்பிள் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டிருக்கிறது. இந்த ஆண்டு போட்டியின் சிறந்த புகைப்படக்காரருக்கான விருது ஒரு இந்தியருக்குக் கிடைத்துள்ளது. இவர் தனது ஐபோன் மூலம் படம் பிடித்த புகைப்படம் தற்பொழுது முதல் இடம் பிடித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற இந்தியர்.. பலே..பலே..

இந்த போட்டியில் வென்ற இந்தியரான ஷரன் ஷெட்டி தனது வெற்றி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். எதற்காக இந்த புகைப்படத்தை ஷரண் ஷெட்டி போட்டிக்காகத் தேர்வு செய்தார் என்ற காரணத்துடன். அந்த புகைப்படம் உருவான கதையையும் தெரிவித்துள்ளார். அந்த காரணத்தைக் கேட்ட பின்பு, ஆப்பிள் நிறுவனம் சரியான வெற்றியாளரைத் தான் தேர்வு செய்துள்ளது என்று நாமே மனமார வாழ்த்துவோம்.

பூனேவை சேர்ந்த ஷரன் ஷெட்டி தனது ஐபோன் எக்ஸ் மூலம் இந்த புகைப்படத்தைப் படம்பிடித்துள்ளார். இந்த புகைப்படத்தை ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாகத் தேர்வு செய்துள்ளது. மொத்தம் 18 பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போட்டியில் ஷரன் ஷெட்டி வெல்டிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரன் ஷெட்டி படம்பிடித்த இந்த புகைப்படம் 'பான்டிங்' என்ற தலைப்பின் கீழ் போட்டில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்று இருக்கிறது. ஐபோன் புகைப்பட போட்டியில் கிராண்ட் பிரைஸ் வின்னராக ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் கெரிகிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த புகைப்படம் பக்கு பகுதியில் மலையேறும் போது எடுக்கப்பட்டது என்றும், குதிரைக்காரரும் குதிரையும் ஓய்வு எடுக்கும் போது அவர்களின் அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி தான் இது என்று கூறியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற இந்தியர்.. பலே..பலே..

ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக இந்த போட்டியை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொண்ட 18 பிரிவுகளுக்கான வெற்றியாளர்களை ஆப்பிள் நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. இவர்களுக்கான பரிசுகள் என்ன என்பதை இன்னும் நிறுவனம் அறிவிக்கவில்லை.

அடுத்த ஆண்டிற்கான ஐபோன் புகைப்பட போட்டிக்கான அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் இப்போதே வெளியிட்டுள்ளது. இந்த போட்டியில் சமர்ப்பிக்கப்படும் புகைப்படம் ஆப்பிள் போனில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வித எடிட்டிங்கும் செய்யப்படாமல், வேறு எந்த தளத்திலும் போட்டியிலும் பங்குபெறாத படமாக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian Amateur Photographer Captured Photo On iPhone X Wins Big At Prestigious iPhone Awards : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X