தரம் வாய்ந்த அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் அறிமுகம்.!
இந்த ஹெலிகாப்டரால் இந்திய விமானப்படை பலம் அதிகரிக்கும். மேலும், எதிர்கால தேவைக்கு ஏற்பவும் பல்வேறு அம்சங்களுடன் ஹெலிகாப்டர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெரிகாப்டர் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த அபாச்சி ரக போர் ஹெரிகாப்டர் இப்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனங்களுடன் இணைந்து ஏஹெச்-64இ (ஜ) அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை தயாரிப்பது தொடர்பாக இந்திய விமானப்படை கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஒப்பந்தம்
இந்தியா மொத்தம் 22 ஹெலிகாப்டர்களை தயாரிப்பது தொடர்பாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட அபாச்சி ரக முதல் போர்
ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதையடுத்து முதல்கட்ட ஹெலிகாப்படர்கள் ஜிலை மாதத்தில் இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன.

போயிங் நிறுவனம்
இந்த வகை ஹெலிகாப்டர்களில் ராணுவத்துடன் இணைந்து செயல்படும் தன்மை ஏறப்படுத்தப்பட்டுள்ளது என போயிங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லம் அதிகரிக்கும்
இந்த ஹெலிகாப்டரால் இந்திய விமானப்படை பலம் அதிகரிக்கும். மேலும், எதிர்கால தேவைக்கு ஏற்பவும் பல்வேறு அம்சங்களுடன் ஹெலிகாப்டர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஹெலிகாப்டர்கள் ஜுலையில் இந்தியாவிற்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஹெலிகாப்டர்களால் மலைகள், கடுமையான வானிலை உள்ள பகுதியிலும் எளிதாக பயணம் செய்ய முடியும். இரவில் இலக்கை துல்லியமாக தாக்கும் திறனைக் கொண்டது. போர் களத்திலிருந்து புகைப்படங்களை அனுப்பும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ராணுவ தளத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி
அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் ஹெலிகாப்டர்களை இயக்குவது தொடர்பாக அலபாமாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்படும் அதிநவீன அபாச்சி போர் ஹெலிகாப்டர் உலகில் பலநிலையில் தாக்குதல் நடத்தும் சிறந்த ஹெலிகாப்டராக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications