Home
News

ஹை-டெக் ஆக மாறுகிறதா இந்திய விவசாயம்? ட்ரோன்களை விரும்பும் விவசாயிகள்.! ஏன் தெரியுமா?

இந்தியா விவசாயத்தை (Agriculture) சார்ந்து இருக்கும் நாடு. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர். ஆனால், சமீப காலமாக போதுமான வளங்கள் இல்லாததாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் விவசாயம் மெல்ல மெல்ல வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான மக்கள் வெவ்வேறு தொழில்களைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். தொழில்நுட்ப (Technology) வளர்ச்சி காரணமாக, விவசாயத்தின் பக்கம் மக்கள் செல்வது குறைந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயத்தை முன்னேற்றி வருகின்றனர் சில விவசாயிகள். அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது விவசாயத்தை மிகவும் எளிமைப்படுத்தி உள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹை-டெக் ஆக மாறுகிறதா இந்திய விவசாயம்? ட்ரோன்களை விரும்பும் விவசாயிகள்!

தமிழ்நாட்டு விவசாய நிலங்களில் விவசாயிகள் ட்ரோன்களை பயன்படுத்துகிறார்களா?

இதுவரை ட்ரோன்களை (Drone) நீங்கள் திரைப்படங்களில் ஏரியல் ஷாட் (Aerial Shot) எடுப்பதற்கும், கூட்டங்களைப் படம் பிடிப்பதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் புகைப்படங்கள் எடுப்பதற்கும் தான் பயன்படுத்தப்பட்டுப் பார்த்திருப்பீர்கள். அத்தகைய ட்ரோன்களை, இங்கு ஒரு விவசாயி தனது விவசாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளார் (Drones in agriculture). தன்னுடைய நிலத்தில் விளையும் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு அவர் இந்த ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறார்.

இவரைப் போலப் பல விவசாயிகள் சமீபகாலமாக ட்ரோன்களை தங்களது விவசாயத்திற்குப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மட்டுமின்றி, தண்ணீர் பாய்ச்ச மற்றும் விதைகளைப் பரப்ப என்று பல்வேறு காரணங்களுக்கு இப்போது ட்ரோன்கள் விவசாயத்தில் (Drones used in agriculture) பயன்படுகின்றன. மேலும், இந்த ட்ரோன்களை கஸ்டமைஸ் (Customise) செய்து தண்ணீரின் (Water) அளவை கண்காணிப்பதற்கும் பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும்.

ஹை-டெக் ஆக மாறுகிறதா இந்திய விவசாயம்? ட்ரோன்களை விரும்பும் விவசாயிகள்!

வாடகைக்கு மற்றும் சொந்தமாக ட்ரோன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள்.! என்ன காரணம்?

விவசாயம் நலிவடைவது காரணமாக, தொழிலாளர்கள் மற்ற தொழில்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக விவசாயத்தில் வேலை செய்யத் தொழிலாளர்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது. இந்நிலையில் ட்ரோன்கள் இந்த வேலைகளை சுலபமாக்குவதோடு, செலவையும் குறைப்பதாக அந்த விவசாயி தெரிவித்துள்ளார்.

இந்த ட்ரோன்களை விலைக்கு வாங்கியோ, லீசுக்கு (Lease) எடுத்தோ இவரைப்போன்ற பல விவசாயிகள் தங்களது நிலத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் தொழில்நுட்பம் பெரிதும் உதவிகரமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரோன்களை லீசுக்கு எடுப்பது தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை விட மிகவும் குறைந்த செலவே ஆகும் என்பதால் சிறு விவசாயிகள் இதனால் அதிகம் பயனடைகின்றனர்.

ஹை-டெக் ஆக மாறுகிறதா இந்திய விவசாயம்? ட்ரோன்களை விரும்பும் விவசாயிகள்!

எதிர்கால இந்திய விவசாயம் ஹை-டெக் தொழில்நுட்பத்துடன் மேம்படுமா?

இதுபோன்ற ட்ரோன்களை உருவாக்கும் பல தனியார் சிறு தொழில் நிறுவனங்கள் (Drone manufacturers in India) சமீபத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. அப்படி டோன்களை உருவாக்கும் நிறுவனங்கள் விவசாயத்தை தங்களது முதன்மை வாடிக்கையாளராகக் கருதி அதற்கு ஏற்ற வகையில் ட்ரோன்களை வடிவமைத்து (Drones for agriculutre crop lands) வருகின்றனர். இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் விவசாயத்தின் பக்கம் தான் அதிகம் இருக்கின்றது.

இந்த ட்ரோன்கள் அனைத்து விதத்திலும் விவசாயத்திற்குச் சாதகமான தொழில்நுட்பமாக இருக்கும் என்று அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு தொழிலாளி செய்வதை விட, அதிக தூரத்தை அவர்களை விடக் குறைவான நேரத்தில் ட்ரோன்கள் கவர்ந்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஹை-டெக் ஆக மாறுகிறதா இந்திய விவசாயம்? ட்ரோன்களை விரும்பும் விவசாயிகள்!

மனிதர்களை விட விவசாய நிலங்களில் ட்ரோன்கள் திறமையாக வேலை செய்கிறதா? எப்படி?

அதுமட்டுமின்றி, ஒரு மனிதன் செய்யும் போது பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் பூச்சிக்கொல்லியின் அளவைவிட சுமார் 60 - 70% குறைவான அளவில் ட்ரோன்கள் பயன்படுத்தும் (Benefits of using drones in agriculture land) என்றும், இதனால் கணிசமான தொகை விவசாயிகளுக்கு மிச்சமாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசும் ட்ரோன்களை விவசாயத்திற்குப் பயன்படுத்த அறிவுரையைக் கூறி வருகிறது. இந்திய அரசு 2030-க்குள் இந்தியாவை ட்ரோன்களின் ஹப்பாக (Drone Hub) உருவாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. ஒரு தொழில்நுட்பம் தனியாக வளர்ச்சி அடைவதை விட, அந்த நாட்டின் அடிப்படை ஆதாரத்தை வளர்க்க பயன்படும் வகையில் செயல்படுவது மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சி என்றே கூறலாம். இந்தியா இத்தகைய ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி பயணிப்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.

Best Mobiles in India

English summary
Indian agriculture Is Becoming Hi-Tech Why Farmers Started Loving To Use Drones on Their Crop Lands
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X