Home
News

இந்தியா: விரைவில் ட்ரோன்கள் குறித்த புதிய கொள்கைகள்.!

தற்போது, ​​இந்தியாவில் ட்ரோன்களை விற்பனை செய்வது, கொள்முதல் அல்லது பயன்படுத்துவது ஆகியவற்றில் எந்த விதிகளும் இல்லை.

By Siva Lingam

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்துதல் குறித்த புதிய கொள்கைகளை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா அவர்கள் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்தியா: விரைவில் ட்ரோன்கள் குறித்த புதிய கொள்கைகள்.!

வெகுவிரைவில் மத்திய அரசு ட்ரோன் குறித்த புதிய கொள்கைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு ஆளில்லா விமானங்கள் இயக்குவது குறித்து சில புதிய விதிகளை உருவாக்கியது. இந்த புதிய கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஐ செய்திகள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி, சர்வதேச தரத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ட்ரோன் கொள்கைகள் உருவாக்க மத்திய விமானப் போக்குவரத்து துறை ஆலோசனைகள் செய்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்த இறுதி வடிவம் விரைவில் முடிவு செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. வர்த்தக மற்றும் தொழிற்துறை துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் சின்ஹா ​​பேசியதாவது:


"ட்ரோன் கொள்கையில் எங்கள் பணியை முடித்துள்ளோம். ஒருசில சிக்கலான பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தரம் குறித்த பார்வையில் சில பிரச்சனைகள் மட்டும் தீர்க்கப்பட வேண்டும். இந்த ஆலோசனை இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும் மிக விரைவில் நாங்கள் ட்ரோன் கொள்கைகளை இறுதி செய்வோம் என்று நம்புகிறோம்.

தற்போது, ​​இந்தியாவில் ட்ரோன்களை விற்பனை செய்வது, கொள்முதல் அல்லது பயன்படுத்துவது ஆகியவற்றில் எந்த விதிகளும் இல்லை. இருப்பினும், இந்திய விமானப் போக்குவரத்து அதன் கொள்கைகளை ஒழுங்குபடுத்தி டி.ஜி.சி.ஏ., 2014 விதிப்படி கடந்த அக்டோபரில் பொது மக்களிடமிருந்து டிரான்ஸ் மற்றும் ஆளில்லாத விமானங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தியது.

இந்தியா: விரைவில் ட்ரோன்கள் குறித்த புதிய கொள்கைகள்.!

கடந்த ஆண்டு டிஜிசிஏ தயாரிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் 250 கிராம் எடையுள்ள டிரோன்கள் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு விதிகள் டிரோனை ஐந்து வகைகளாக பிரிக்கின்றன. இதன்படி 250 கிராம் வரை எடையுள்ள டிரான்கள் 'நானோ' ட்ரோன்கள் என்றும், 250 கிராம் மற்றும் 2 கிலோ இடையே எடையுள்ள ட்ரோன்கள் 'மைக்ரோ' டிரான்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும், 2கிலோ முதல் 25 கிலோ வரை எடையுள்ள டிரான்கள் 'மினி' ட்ரோன்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. 25 கிலோ முதல் 150 கிலோ வரையிலான ட்ரோன்கள் 'சிறிய' டிரோன் என்று அழைக்கப்படுகின்றன, அதே நேரத்தில் 150 கிலோவுக்கும் அதிகமான ட்ரோன்கள் 'பெரிய' ட்ரோன் என்றும் அழைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
india will soon receive a new Drone policy ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X