இந்தியாவை ஆச்சர்யத்தில் ஆழத்தபோகும் ஆளில்லா விமானங்கள்.!
ஆளில்லா விமானங்களின் பயன்பாடு மூலம் இந்தியா பல ஆச்சர்யங்களை அனுபவிக்க உள்ளது.
ஆளில்லா விமான பயன்பாடு குறித்த கொள்கையை இந்தியா சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது ஒரு சரியான நகர்வாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் இந்த கொள்கை குறித்து சுவிட்சர்லாந்தின் ஆளில்லா விமான தொழிற்சாலை சங்க தலைவர் சைமன் ஜான்சன் கூறியதாவது:

இந்தியாவில் புதிய கொள்கை
ஆளில்லா விமானங்களின் பயன்பாடு மூலம் இந்தியா பல ஆச்சர்யங்களை அனுபவிக்க உள்ளது. ஆளில்லா விமானங்களில் பொருத்தப்படும் கேமரா மூலம் மனிதர்கள் டிஸ்ப்ளே தலைகவசத்துடன் நேரடி ஒளிப்ரப்பு மேற்கொள்வதை அதிகம் காண முடியும்.
குறிப்பிட்ட சில ஆளில்லா விமானங்களை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக சாலை வாகனங்கள். யார்?, எங்கே?, எப்படி? பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். இதற்கு விதிமுறைகள் கட்டாயம் இருக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் சான்றிதழ் பெறப்பட்டு பயன்படுத்தும் ஆளில்லா விமானங்கள் என்று இரு பிரிவு உள்ளது.
பாரம்பரியமாக மனிதர்கள் மூலம் பயன்படுத்தப்படும் விமானங்களை விட இது விலை குறைவு. அதேபோல் இயக்குதல், பராமரிப்பும் முந்தைய முறையை விட அதிக சிரமம் கிடையாது. வாகன போக்குவரத்துக்கு எப்படி ஓட்டுனர் உரிமம், பர்மிட், இன்சூரன்ஸ், ஆர்சி புக் போன்றவை தேவைப்படுகிறதோ?, அதேபோல் ஆளில்லா விமானங்களையும் இயக்குபர்வகளுக்கு அவசியம்’’ என்றார்
இந்தியாவின் சந்தை எப்படி இருக்கும்
நான் இந்திய சந்தைக்கு பிரபலம் கிடையாது. ஆனால், இங்குள்ள சர்வேயர்கள், ஆய்வாளர்கள், விவசாயிகள், இயற்கை வள மேலாளர்கள், மீடியா, பாலிவுட் ஆகிய துறையினர் ஏரியல் வியூ படங்களை அதிகம் எடுக்கக்கூடிய சிறந்த வல்லுனர்களை கொண்டுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆளில்லா விமானத்தின் பந்தயம் மற்றும் விளையாட்டு முறைக்கு நாம் மாறுவதன் மூலம் உருவாகும் மின்னணு விளையாட்டுக்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.
பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி குறைந்த விலை கொண்ட தொழில் ரீதியான ஆளில்லா விமானங்கள் பயன்பாடு காரணமாக இந்தியாவில் அதன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உருவாகும். பெரும்பாலான உப பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. கேமரா, தொடர்பு, விமான மேலாண்மை போன்று சிறப்பு தன்மை கொண்ட ஆளில்லா விமானங்கள் இதர நாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்து வெளிவரும்.
இந்தியாவில் ஆளில்லா விமான சந்தை
இந்தியாவில் செயற்கைகோள்களோடு போட்டியிடும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இவை பூமியை ஆய்வு செய்யவும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆளில்லா வாகனங்கள், மின்னணு வாகனங்கள் மீது விமான தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. நூதன வடிவமைப்பை கொண்ட ஆளில்லா விமானங்கள் புதிய வான்வழியை கண்டுபிடிக்க உதவும். அதனால் விமான தயாரிப்பாளர்கள், அமேசான், உபேர் போன்ற வாகன இயக்குபவர்களுக்கு ஆளில்லா விமானங்களின் பயன்பாடு கைகொடுக்கும்.
ஆளில்லா விமான பயன்பாட்டில் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து தான் ஆளில்லா விமானங்களின் தாய் வீடு என்று கூறலாம். அங்கு 80 லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர். எங்களது உள்ளூர் சந்தை என்பது மிகவும் சிறியது. அதனால் அங்குள்ள நிறுவனங்கள் முதல் நாள் முதலே ஏற்றுமதி செய்ய வேண்டும். இது அங்குள்ள ஒரு குறைபாடு. ஆனால், அங்குள்ள சுற்றுசூழல் எங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். முடிவுகள் விரைந்து எடுக்கப்பட்டு பொருட்கள் எங்களுக்கு உடனடியாக கிடைத்துவிடும்.
கடந்த 3 ஆண்டுகளில் ஆளில்லா விமானங்கள் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பறக்கும் ரோபோக்களின் விற்பனை இந்த துறையில் பெரிய சாதனையாக உள்ளது. பணம் உள்ள இடத்தில் தொழில்நுட்பம், மென்பொருள் சேவை மாற்றம் என்பது எளிது. சுவிட்சர்லாந்தில் ஆளில்லா விமானம் சார்ந்த பொருட்களின் விற்பனை சுமார் 30 கோடி சுவிஸ் பிராங்ஸ் மதிப்பலானதாகும். இது மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தனிமை பாதிப்பு
ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மற்றும் தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்ப நாம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் ஏற்று பயன்பெறும் வகையில் ஆளில்லா விமான கொள்கைகள் இருக்க வேண்டும்.
ஆளில்லா விமானங்கள் துறைமுகம்
இது ஏற்கனவே நடந்து வருகிறது. ஆளில்லா விமான துறைமுகம் என்பது அளவில் மாறுபடக் கூடியது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமைக்கலாம். சட்டப்பூர்வமாக அது பறக்க தொடங்கும் இடமும், தரையிறங்கும் இடமும் அவசியம். சிலர் குறைந்தபட்ச சேவையை மட்டுமே வழங்குவார்கள். இதர நபர்கள் பராமரிப்பு, பயிற்சி, பேட்டரி மேலாண்மை, விற்பனை சங்கிலி சேவை ஆகியவற்றை வழங்குவார்கள்.


Click it and Unblock the Notifications








