ISRO முதுகில் குத்திய ரஷ்யா? 2 நாள் கேப்புல ஆப்பு.. இப்போ புரியுது.. எதுக்கு அவசரமா ராக்கெட் விட்டீங்கன்னு!
விண்வெளி வரலாறு மற்றும் ஆராய்ச்சியில்.. இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் கிடைக்கவிருந்த மிக முக்கியமான புகழையும், பெயரையும் தட்டிப்பறிக்கும் ஒரு வேலையை ரஷ்யா (Russia) பார்த்துள்ளது. அதென்ன வேலை? இஸ்ரோ (ISRO) என்ன திட்டமிட்டு இருந்தது? குறுக்கே ரஷ்யா எப்படி வந்தது? இதோ விவரங்கள்:
இஸ்ரோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organization) கனவு திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-3 விண்கலமானது (Chandrayaan-3 Spacecraft) கடந்த ஜூலை 14இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு சந்திர கிரகத்திற்கு (Moon) மிகவும் நெருக்கமான தூரத்தில் இருக்கிறது.

இதற்கிடையில் ராஸ்கோஸ்மோஸ் (ROSCOSMOS) என்று அழைக்கப்படும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமானது (Russian space agency), ஏறக்குறைய ஐந்து தசாப்தங்கள் கழித்து, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திர கிரகத்தை நோக்கி லூனா-25 (Luna-25) என்கிற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
நினைவூட்டும் வண்ணம் ரஷ்யாவின் லூனா-24 மூன் மிஷன் (Luna-24 Moon Mission) ஆனது கடந்த 1976 ஆம் ஆண்டில் நடந்தது. அதன் பிறகு 2023 ஆம் ஆண்டில் தான் ரஷ்யா நிலவிற்கு மீண்டும் தனது விண்கலத்தை அனுப்புகிறது. இதுவரையிலாக இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் எந்த சிக்கலும் இல்லை. விண்வெளியும், நிலவும் "யாருடைய அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது"அல்லவா?!
பிரச்சினை எங்கே ஆரம்பிக்கிறது என்றால்.. லூனா-25 விண்கலமானது சரியாக எந்த தேதியில், எந்த பகுதியில் நிலவில் தரை இறங்குகிறது என்பதில் தான் இருக்கிறது. முதலில் லூனா-25 ஆனது 2023 ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் (South Pole of the Moon) தரை இறங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆகஸ்ட் 23 என்பது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் தரை இறங்க திட்டமிடப்பட்டுள்ள தேதியாகும். அதுமட்டுமல்ல சந்திரயான்-3 விண்கலமும் கூட சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் தான் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே பகுதியில், ஒரே நாளில் தரை இறங்குவதால் இவ்விரு நாட்டு விண்கலங்களுக்கும் ஏதேனும் பாதிப்பு அல்லது சிக்கல் ஏற்படுமா என்கிற கேள்விகள் மேலோங்கின.
அதற்கு ரஷ்ய விஞ்ஞானிகள், "அவைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுவது அல்லது மோதுவது போன்ற ஆபத்துகள் எதுவும் இல்லை. நிலவில் அனைவருக்கும் போதுமான இடம் உள்ளது." என்று கூறி.. ஒன்றுக்கொன்று மோதுமா என்கிற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதற்கிடையில் ரஷ்யாவின் லூனா-25 வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ வாழ்த்தும் கூறியிருந்தது.
இதற்கிடையில் லூனா-25 விண்கலமானது 2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதியே நிலவின் மேற்பரப்பில் தரை இறங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஆனது நிலவில் தரை இறங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே லூனா-25 தரை இறங்க உள்ளது.
இதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் (Soft Landing) செய்த (அதாவது நிலவில் தனது விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய) முதல் நாடு என்கிற பட்டத்தை ரஷ்யா அடைய உள்ளது. உண்மையில் இந்த புகழும், பெயரும் இந்தியாவிற்கும், இஸ்ரோவிற்கும் தான் வர வேண்டும். ஆனால் ரஷ்யாவும், லூனா-25 விண்கலமும் திடீரென்று உள்ளே வர, எல்லாமே மாறி விட்டது.
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ் (Roscosmos head Yuri Borisov), "லூனா-25 மூன் லேண்டர் ஆனது 203 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று நிலவின் மேற்பரப்பைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறி உள்ளார்.
நான்கு "கால்களை" கொண்ட லூனா-25 ஆனது 1.6 மீட்டர் நீளமுள்ள லூனார் ரோபோடிக் "கையையும்" (Lunar Robatic Hand) கொண்டுள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் உள்ள படிவுகளை (Deposits) அகற்றவும், சேகரிக்கவும் உதவும். குறியோராக இது லூனார் போலார் எக்ஸோஸ்பியரின் பிளாஸ்மா மற்றும் தூசி கூறுகளை (Plasma and Dust components of Lunar Polar Exosphere) ஆய்வு செய்யும்.


Click it and Unblock the Notifications








