ஜகா வாங்கிய Samsung.. Ind VS Pak பிரச்சனையால் ஷட்டர்-ஐ போட்டு விட்டு எஸ்கேப்.. Galaxy S25 Edge கேன்சல்!
அப்பாடா.. ஒருவழியாக சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge Launch Date) ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டது என்று பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள்.. இந்தியா - பாகிஸ்தானுக்கு (India Vs Pakistan) இடையேயான போர்க்கால சூழ்நிலை காரணமாக, டெல்லியில் நடக்கவிருந்த கேலக்ஸி எஸ்25 எட்ஜ் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது.
நேற்று (மே 8 ஆம் தேதி) தான், சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் மே 13 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதற்கிடையில் டெல்லியில் நடக்கவிருந்த கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு குறித்த அழைப்பில் இது "ஒரு ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனை விட அதிகம்" என்றும்.. "ஒவ்வொரு வளைவிலும், விளிம்பிலும் மற்றும் காம்போனென்ட்டிலும்" என்றும்.. "எஸ் சீரிஸ் பெயருக்கு தகுதியான பிரீமியம் அனுபவத்தை உருவாக்க துல்லியமான என்ஜினீயரிங்கில் ஒரு திருப்புமுனை" என்றும் சாம்சங் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எல்லாவற்றை விட முக்கியமாக, இதில் 200எம்பி ப்ரைமரி சென்சார் (200MP Primary Sensro) இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி பயங்கரமான எதிர்பார்ப்புகளை கிளப்பிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் தாற்காலிகமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என்கிற தகவல் சாம்சங் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வின்பியூச்சர் (WinFuture) படி, இந்த ஸ்மார்ட்போனின் 256ஜிபி மாடலின் விலை €1,249 ஆக (தோராயமாக ரூ. 1,19,606) இருக்கலாம். மறுகையில் உள்ள 512ஜிபி ஆப்ஷன் €1,369 க்கு (தோராயமாக ரூ.1,31,098) அறிமுகம் செய்யப்படலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஐசி ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் உள்ளிட்ட பல கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் (லீக் ஆன) அம்சங்கள்:
- 3120 × 1440 ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே
- டிஸ்பிளேவின் கீழே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 12ஜிபி ரேம்
- 256ஜிபி அல்லது 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் உடனான 200எம்பி ப்ரைமரி கேமரா
- இது எஸ்25 அல்ட்ரா மாடலில் காணப்படும் அதே 1/1.3-இன்ச் யூனிட் ஆகும், இது உயர்தர 2x ஜூம் ஷாட்களை வழங்கும் திறன் கொண்டது.
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12எம்பி அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12எம்பி செல்பீ கேமரா
- இது 1/3.2-இன்ச் S5K3LU சென்சாரை பயன்படுத்துகிறது
- 5.85 மிமீ ஸ்லிம் டைட்டானியம் பிரேம்
- பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
- முன்பக்கம் கொரில்லா கிளாஸ் செராமிக் 2
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 7
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7


Click it and Unblock the Notifications








