India Vs Pakistan Asia Cup 2022: இலவசமாக லைவ் மேட்ச் பார்ப்பது எப்படி?
ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டியின் 15-வது எடிஷன் இன்றுமுதல் தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணி மோதுகின்றது. இதில் நாளைய(ஞாயிற்றுக் கிழமை) போட்டியானது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை நேரலையில் இலவசமாக எப்படி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி
இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியானது துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி இதுவாகும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் இரவு 7 மணிக்கு நடைபெறும்.

இந்தியா Vs பாகிஸ்தான் நேரலை பார்ப்பது எப்படி?
ஆசிய கோப்பை 2022 போட்டியின் இந்திய நேரலை உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி சேனல்களில் நேரலை ஒளிபரப்பப்பட இருக்கிறது.
ஓடிடி ஸ்ட்ரீமிங் பொறுத்தவரை ஸ்டார் நெட்வொர்க் என்று குறிப்பிடும் போதே கணித்துவிடலாம். இந்த போட்டிகளின் நேரலையை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இதற்கு பிரத்யேக சந்தா தேவைப்படும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இலவசமாக நேரலை பார்ப்பது எப்படி?
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் Disney+ Hotstarக்கான இலவச சந்தா அணுகலை வழங்குகிறது.
இந்தியாவில் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) ஆகிய மூன்றும் தனது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா அணுகலை வழங்குகிறது.
எனவே நீங்கள் இலவசமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகலை ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் பெற்று நேரலையை பார்க்கலாம்.

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ பயனர்களாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது.
மேட்ச் பார்ப்பதற்கு கூடுதல் இணையம் தேவைப்படும். எனவே இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது.
அதேபோல் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

தினசரி 1.5 ஜிபி டேட்டா தேர்ந்தெடுக்கும் பயனராக நீங்கள் இருந்தால், ரூ.659 ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளும் வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.

1.5 ஜிபி , 2 ஜிபி இரண்டுமே போதாது என்று இருக்கும் பட்சத்தில் 3 ஜிபி டேட்டா திட்டங்களும் இருக்கிறது. தினசரி 3 ஜிபி டேட்டா உடன் 28 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கும் இந்த திட்டத்தின் விலை ரூ.601 ஆகும்.
அதேபோல் பல்வேறு விலைப் பிரிவில் ஜியோ ரீசார்ஜ் திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் கிடைக்கிறது.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களை பொறுத்தவரை ரூ.499 முதல் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறது. ரூ.499 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவை பெறலாம். அதேபோல் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலும் வழங்கப்படுகிறது.

அதேபோல் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் 3 மாதத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது.

விஐ ரீசார்ஜ் திட்டங்கள்
அதேபோல் விஐ நிறுவனமும் குறிப்பிட்ட திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலை இலவசமாக வழங்குகிறது. ரூ.151, ரூ.399, ரூ.499, ரூ.601 போன்ற ரீசார்ஜ் திட்டங்களில் பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை பெறலாம்.


Click it and Unblock the Notifications