இந்தியாவில் தெரியும் பிங்க் சூப்பர் மூன்; மிஸ் பண்ணிடாதீங்க! எப்போது தெரியுமா?

|

இந்த வாரம் இந்தியாவில் தெரியவிருக்கும் மிக முக்கியமான சந்திர நிகழ்வுகளில் ஒன்றானது இந்த பிங்க் சூப்பர் மூன் சந்திர நிகழ்வு. இந்த பிங்க் சூப்பர் மூன் மற்ற பௌர்ணமி நிலவு போல் இல்லாமல் மிகவும் பிரகாசமானதாகவும் மிகப்பெரியதாகவும் இருக்குமென்று நாசா தெரிவித்துள்ளது. இந்த பிங்க் சூப்பர் மூன் நிகழ்வை இந்த காணலாம் எந்த நேரத்தில் காணலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இது சூப்பர் மூன் அல்ல, அதைவிட பெரிய மூன்

இது சூப்பர் மூன் அல்ல, அதைவிட பெரிய மூன்

சந்திரன் வட்ட வடிவத்தில் முழுமையாகத் தெரியும் பௌர்ணமி ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, சாதாரணமான சூப்பர் மூன் போல் இல்லாமல், அதிலிருந்து சற்று வித்தியாசமானது இந்த பிங்க் சூப்பர் மூன் நிகழ்வு. சூப்பர் மூன் என்பது முழு நிலவைப் போலவே முழுமையான வட்ட தோற்றத்துடன் தெரியும், இது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான்.

பூமிக்கு மிக அருகாமையில் வரும் சந்திரன்

பூமிக்கு மிக அருகாமையில் வரும் சந்திரன்

ஆனால், பிங்க் சூப்பர் மூன் அப்படியானது அல்ல, சூப்பர் மூன் நிகழ்வை போல் இல்லாமல் இது மிகவும் பிரகாசமாகவும் பெரியதாகவும் தோன்றுகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை நாசா விளக்கியுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமிக்கு நெருக்கமாக இருக்கும்போது நாம் சூப்பர் மூன் நிகழ்வை காண்கிறோம். அதேபோல் பூமிக்கு இன்னும் மிக அருகாமையில் சந்திரன் வரும் பொழுது இந்த பிங்க் சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது என்று கூறியுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்கள் இதுதான்.!ஏர்டெல் நிறுவனத்தின் மெர்சலான 10ப்ரீபெய்ட் திட்டங்கள் இதுதான்.!

பிங்க் சூப்பர் மூன் பெரிதாக தெரிய இதுதான் காரணம்

பிங்க் சூப்பர் மூன் பெரிதாக தெரிய இதுதான் காரணம்

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான வழக்கமான தூரம் 3,84,000 கி.மீ. ஆகும். ஆனால், பிங்க் சூப்பர் மூன் நிகழ்வின் போது சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில், பூமியிலிருந்து வெறும் 3,57,085 கி.மீ தூரத்தில் நெருங்கி நகர்கிறது. இதனால் தான், சூப்பர் மூன் நிகழ்வை விட மிகவும் பிரகாசமாகவும் பெரிதாகவும் பிங்க் சூப்பர் மூன் நிகழ்வை நாம் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் சுற்றுப்பாதை வட்டமா அல்லது நீள்வட்டமா?

நிலவின் சுற்றுப்பாதை வட்டமா அல்லது நீள்வட்டமா?

பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் நீள்வட்ட சுற்றுப்பாதையால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். நிலவின் சுற்றுப்பாதை முற்றிலும் வட்டமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சுற்றுப்பாதையின் கோணம் சிறிது மாறுகிறது, இதனால், சந்திரனின் அளவு வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

உண்மையா? பொய்யா?., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்!உண்மையா? பொய்யா?., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்!

இன்று என்ன நேரத்தில் பிங்க் சூப்பர் மூனை நாம் காணலாம்

இன்று என்ன நேரத்தில் பிங்க் சூப்பர் மூனை நாம் காணலாம்

பிங்க் சூப்பர் மூன் இந்த வாரம் ஏப்ரல் 7 இரவு (அதாவது இன்று) மற்றும் ஏப்ரல் 8 காலை தெரியும். இந்தியாவில், இது ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தெரியும். இந்த நிகழ்வு கடந்த மாதம் ஒரு முறை காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா தெரிவித்த கூடுதல் தகவல்

நாசா தெரிவித்த கூடுதல் தகவல்

இந்த ஏப்ரல் தோற்றத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு மே மாதத்தில் மீண்டும் ஒரு முறை பிங்க் சூப்பர் மூன் தெரியும். இதற்கிடையில், சந்திரனின் தோற்றம் 2020 அக்டோபர் 31 அன்று மிகக் குறுகியதாக இருக்கும் என்று நாசா அறிவித்துள்ளது.

BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!BSNL ரூ.96 வசந்தம் கோல்டு திட்டத்தின் வேலிடிட்டி நீட்டிப்பு! 500ஜிபி வரை கிடைக்கும் டேட்டா திட்டம்!

பிங்க் சூப்பர் மூன் பெயர் காரணம்

பிங்க் சூப்பர் மூன் பெயர் காரணம்

சந்திரனின் தோற்றம் ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்றார் போல் பெயரிடப்பட்டுள்ளது. சில அறிக்கைகளின்படி, பிங்க் சூப்பர் மூன் என்ற இந்த நிலையின் பெயரை வைல்ட் கிரவுண்ட் ஃப்ளோக்ஸ் (Wild Ground Phlox) பூக்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வைல்ட் கிரவுண்ட் ஃப்ளோக்ஸ் பூக்கள் வசந்த காலத்தில் பூக்கும் ஒரு பூ வகையாகும். இந்த மலர்கள் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
India to see Pink Super Moon Today Check The Timings : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X