விரைவில் அறிமுகமாகும் இ-பாஸ்போர்ட்: மைக்ரோசிப் வசதியுடன் கூடிய பல அம்சங்கள் உள்ளதாக தகவல்!

|

மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இ-பாஸ்போர்ட்டில் மைக்ரோசிப் வசதியுடன் கூடிய பல அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 இ-பாஸ்போர்ட்டுகளை இந்திய

அதாவது வெளியுறவுத் துறை அமைச்சக்கத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இது குறித்து கூறுகையில், பாஸ்போர்ட்தொடர்பான சேவைகளை மேம்படுத்தி தருவது எங்கள் அமைச்சகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் தொடர்ச்சியாக தான் அடுத்த தலைமுறைகான இ-பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்க உள்ளது எனத் தெரிவித்தார்.

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50எம்பி கேமராவுடன் புதிய ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்

 இந்த பாஸ்போர்ட்டுகள் மூலம்

குறிப்பாக இந்த பாஸ்போர்ட்டுகள் மூலம் பயோமெட்ரிக் தரவுகள் கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு செல்வது
எளிமையாக்கப்படும். அதேபோல் இது பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். பின்பு இப்படி பயோமெட்ரிக் முறையை அறிமுகம்
செய்வதன் மூலம் மோசடிகளை தவிர்க்க முடியும் என்று அரசுத் தரப்பு உறுதிபட கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அந்த கவலை வேணாம்- வாட்ஸ்அப்-ல் வரவிருக்கும் புதிய மேம்பட்ட தேடுதல் அம்சம்: குறிப்பா அவர்களுக்கு தான்!இனி அந்த கவலை வேணாம்- வாட்ஸ்அப்-ல் வரவிருக்கும் புதிய மேம்பட்ட தேடுதல் அம்சம்: குறிப்பா அவர்களுக்கு தான்!

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல

தற்போது இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல விரும்பும் குடிமக்களுக்கு மத்திய அரசு, புக்லெட் பாஸ்போர்ட்டுகளை தான் வழங்கி வருகிறது. அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் இந்திய அரசு, தன் குடிமக்களுக்கு 12.8 மில்லியன்
பாஸ்போர்ட்டுகளைக் கொடுத்துள்ளது. இந்த பாஸ்போர்ட்டுகள் மூலம் அதிக மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

வாங்கலாமா? ஆரம்பமே சலுகையோடு- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே!வாங்கலாமா? ஆரம்பமே சலுகையோடு- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே!

இந்த பிரச்சனையை சமாளிக்கும்

எனவே இந்த பிரச்சனையை சமாளிக்கும் நோக்கிலேயே இ-பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இ-பாஸ்போர்ட் குறித்து தொடர் சோதனைகளை இந்திய அரசு செய்து வருகிறது. அதாவது முதல் கட்டமாக அரசு அதிகாரிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக இ-பாஸ்போர்ட்டுகளை வழங்கிவருகிறது இந்திய அரசு. அதேபோல் இப்போது வரை 20,000 இ-பாஸ்போர்ட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாககூறப்படுகிறது.

ரூ. 7999 முதல் புது ரெட்மி போன் வாங்கலாம்.. முன்னெப்போதையும் விட குறைந்த விலையில்.. உடனே முந்துங்கள்..ரூ. 7999 முதல் புது ரெட்மி போன் வாங்கலாம்.. முன்னெப்போதையும் விட குறைந்த விலையில்.. உடனே முந்துங்கள்..

ழிக்கவும் முடியும் எ

அதேபோல் பாஸ்போர்ட் எடுப்பவர்களின் அனைத்து ஆவணங்களும் இ-பாஸ்போர்ட்டில் இணைக்கப்பட்டுள்ள சிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் ஆவணங்களை திருட முடியாது. பின்பு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். பின்பு இதுபோன்ற புதிய வசதிகளின் மூலம் மோசடி செய்ய முடியாது. அதேசமயம் போலி பாஸ்போர்ட்களை ஒழிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi 11T Pro ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. இது 'ஹைப்பர்போன்'.. அப்படினா என்ன தெரியுமா?Xiaomi 11T Pro ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. இது 'ஹைப்பர்போன்'.. அப்படினா என்ன தெரியுமா?

மக்களுக்கு மிகவும்

புத்தக பாஸ்போர்ட்டில் இருப்பது போலவே அனைத்து அம்சங்களும் இந்த இ-பாஸ்போர்ட்டுகளில் இருக்கும் என்று கூறப்படுகிறது.பின்பு இதுபோன்ற புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.


மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India to launch e-passport through microchip: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X