Home
News

சீறிப்பாய போகும் 6G.. உலகத்தின் முதல் நாடாக 6G-க்கு பச்சை கொடி.. மோடியின் பலே பிளானால் மக்களுக்கு என்ன நன்மை?

உலக நாடுகளை வியப்படைய வைக்கும் வகையில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளை முந்திக்கொண்டு, உலகத்தின் முதல் 6ஜி தொழில்நுட்பத்தை (6G Technology) பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ள நாடாக இந்தியா இருக்கப்போகிறது என்ற தகவலை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா (Union Communications Minister Jyotiraditya Scindia) தெரிவித்திருக்கிறார். என்னது? இந்தியாவுக்கு 6ஜி தொழில்நுட்பம் வரப்போகிறதா? எப்போது? இதை எந்த டெலிகாம் நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். உங்களுடைய சில கேள்விக்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. விபரங்கள் இதோ.

இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா தெரிவித்துள்ளார். இந்திய தற்போது மிக வேகமாக 4ஜி மற்றும் 5ஜி தளத்தில் வளர்ந்து வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 4ஜி மற்றும் 5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் அசுரர் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சீறிப்பாய போகும் 6G.. உலகத்தின் முதல் நாடாக 6G-க்கு பச்சை கொடி..

சீறிப்பாய போகும் 6G.. உலகத்தின் முதல் நாடாக 6G-க்கு பச்சை கொடி:

அதேபோல், அடுத்தகட்டமாக இந்தியா மிக விரைவில் அதன் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பி.எஸ்.என்.எல். (BSNL), மற்றும் விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு பயனர்களுக்கு புதிய 6ஜி தொழில்நுட்பத்தை இந்தியா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது டெல்லியில் நடைபெற்ற 8வது இந்திய மொபைல் காங்கிரஸில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா 6G தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் இந்தியாவின் முற்போக்கான திட்டங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிரார். இந்த நடவடிக்கை 6G பயன்பாட்டில் முன்னோடியாக இருப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் ஆசைக்கு ஏற்ப, உலகளாவிய தொழில்நுட்ப போட்டியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தும் நோக்கத்துடன் செயல்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த முன்னேற்றங்களின் மையத்தில், 6G தொழில்நுட்பத்தை பொது மக்களுக்கு அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உறுதிப்பாடுடன் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய மொபைல் காங்கிரஸின் ஒரு பகுதியாக உள்ள சர்வதேச 6G கூட்டரங்கில், இந்தியா 6G கூட்டணியின் உலகளாவிய 6G புதுமைகளில் இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கை உறுதிப்படுத்தியது.

மோடியின் பலே பிளானால் மக்களுக்கு என்ன நன்மை?

உலகளாவிய 6G காப்புரிமைகளில் 10% பங்கை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் அழுத்தமான நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டத்தில் சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது 6G சந்தையில் இந்தியா முன்னணியில் தோன்றும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. மொபைல் தொழில்நுட்பத்தின் முந்தைய தலைமுறைகளில் அடைந்த சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா அடுத்த அலையை வழிநடத்துவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.

"5G மற்றும் 4G இல் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது, இப்போது 6G இலும் நாங்கள் முன்னோடியாக இருப்போம். பிரதமர் மோடி 6G-க்கு பச்சைக்கொடி காட்டும் முதல் நாடாக நாம் தான் இருக்கப்போகிறோம்" என்று அவர் கூறியுள்ளார். இத்துடன் தொலைத்தொடர்பு துறையின் சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசாங்கத்தின் முயற்சியில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், டிஜிட்டல் தொடர்புகளை மேம்படுத்துவதும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜி சேவையை மக்கள் அணுகும் விதத்தில் மலிவானதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5ஜி பயன்பாடுகள் எப்படி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவியதோ, அதை விட 6ஜி நெட்வொர்க் பல மடங்கு, பல விதமான பயன்பாடுகள் மூலம் மக்களுக்கு அதிநவீன சேவையை வழங்கும் என்று இந்தியா நம்புகிறது. 6ஜி இந்தியாவிற்கு வந்தால், ராக்கெட் வேகத்தில் பாதுகாப்பான இன்டர்நெட் சேவையை மக்கள் அணுக முடியும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
India To Launch 6G Soon Following Prime Minister Narendra Modi's Vision To Lead Global Tech Race
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X