ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. இந்தியாவில் சீன CCTV கேமராக்களுக்கு தடை.. காரணம் என்ன? இதோ முழு விவரம்..
தற்போது அனைத்து இடங்களிலும் சிசிடிவி செக்யூரிட்டி கேமராக்கள் இருப்பதால் தான் திருட்டு பயம் குறைந்துள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது பொருளை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் பயன்படுகிறது இந்த சிசிடிவி செக்யூரிட்டி கேமராக்கள். இந்நிலையில் சிசிடிவி கேமரா குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா
அதாவது சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஏப்ரல் 1 (நாளை) முதல் இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீன தயாரிப்புகள் ஆகும்.

அதுவும் பிரபலமான ஹிக் விஷன், தகுவா மற்றும் டிபி-லிங்க் போன்ற பல சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சிசிடிவி கேமராக்களின் பாதுகாப்பு தரத்தைக் கடுமையாக்குவதற்காகத் தர பரிசோதனை சான்றிதழ் (எஸ்டிக்யூசி) பெறுவது கட்டாயம் என்ற புதிய விதியை நாளை அரசு அமல்படுத்த உள்ளது.
ஆனால் சீன தயாரிப்பு சிப்கள் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கு இந்த விதிமுறைப்படி தரச் சான்றிதழ் மறுக்கப்படும். எஸ்டிக்யூசி (STQC) ஒப்புதல் இல்லாமல் சிசிடிவி கேமராக்களை இந்திய சந்தையில் விற்பதற்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த தடை சீன நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பலத்த அடியாக இருக்கும்.
மேலும் இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்கும். அதன்படி பிரமா, சிபி பிளஸ், க்யூபோ, மேட்ரிக்ஸ் மற்றும் ஸ்பார்ஷ் போன்ற உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்கள் விற்பனை விரிவடையும். அதுவும் இந்த நிறுவனங்கள் சீனாவின் உதிரி பாகங்களை சார்ந்திருக்காமல், தைவான் சிப்கள் மற்றும் உள்நாட்டுப் பொருட்களை வழங்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ள இந்த சீன நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்கள் வழியாக தரவுகள் கசியவும் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கண்காணிக்கவும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் இறக்குமதி செய்யப்படும் ' சிசிடிவி' கேமராக்களில், அதன் முக்கிய அங்கமான 'சிப்செட்' எந்த நாட்டை சேர்ந்தது என்பதை நிறுவனங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். சீன சிப் செட்களை கொண்ட 'சிசிடிவி கேமராக்களுக்கு, இனி அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டு
அதேபோல் நாளை முதல் பான் கார்டு விதிகளில் சில மாற்றங்கள் வருகிறது. இது குறித்த தகவல்களை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டுக்கு (PAN Card) விண்ணப்பிக்கும்போதும் ஆதார் கார்டு (Aadhaar) மட்டுமே போதுமானதாக இருக்காது. அதாவது இனிமேல் பிறந்த தேதிக்கான சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிறப்பு சான்றிதழ், 10-ம் வகுப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், மாஜிஸ்திரேட் வழங்கிய பிரமாணப் பத்திரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக அதேபோல் பான் கார்டில் உள்ள பெயர் இனி ஆதார் கார்டில் உள்ளபடியே இருக்கும். மேலும் பழைய விண்ணப்பப் படிவங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








