எதிரிகளை வழிமறித்து தாக்கும் இந்தியா..!?

Written By:

யாரு என்ன சொன்னாலும் நம்ம நாடு நமக்கு எப்பவுமே கெத்து தான். உள்ளுக்குள்ள ஆயிரம் ஊழல்கள், எக்கச்சக்க பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியாவை யாரும் விட்டு கொடுக்க மாட்டோம்.

நம் நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் ஊழல் சார்ந்த விஷயங்கள் தெரிந்திருக்கும் அளவு நம்ம நாடு எந்தளவு வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதை அறிந்து கொள்வதில்லை என்பதே உண்மை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வளர்ச்சி

வளர்ச்சி

உலகில் அமைதியை வலியுறுத்தும் பல்வேறு நாடுகளை போன்றே இந்தியாவும் அதி நவீன ஆயுதங்களை உள்நாட்டில் தயாரித்து வருகின்றது உங்களுக்கு தெரியுமா.

பாதுகாப்பு

பாதுகாப்பு

மற்ற நாடுகளிடம் இருந்து தற்காத்து கொள்ளும் நோக்கில் அதிநவீன ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து தயாரித்து வருகின்றது நமக்கு பெருமையான விஷயமே.

ஆயுதம்

ஆயுதம்

அந்த வகையில் இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட அதி நவீன தொழில்நுட்ப ஆயுதம் சார்ந்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ்

அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ்

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை மேம்படுத்தப்பட்ட ஏர் டிஃபென்ஸ் வகையை சேர்ந்த ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

தீவு

தீவு

ஒடிசாவின் சண்டிப்பூரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் அமைந்துள்ள தீவில் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து நேற்று காலை 9.46 மணிக்கு இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

தாக்குதல்

தாக்குதல்

ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணையை வாணில் எதிர்த்து தாக்கும் சோதனையில் மேம்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணை துல்லியமாக இலக்கை தகர்த்தது புதிய ஏவுகணையின் வெற்றியை உறுதி செய்தது.

டிஆர்டிஓ

டிஆர்டிஓ

இந்த ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார்

சென்சார்

அதிகம் மேம்படுத்தப்பட்ட இந்த வகை ஏவுகணை ஐஎன்எஸ் இன்டர்செப்டார், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டர், மற்றும் மின் ஏவி போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.

சோதனை

சோதனை

இதோடு கைடன்ஸ் சிஸ்டம், ஆக்டிவேஷன் சிஸ்டம் மற்றும் க்ரிட்டக்கல் ரேடியோ ஃப்ரீக்வன்சி போன்ற சென்சார்கள் சரியான முறையில் வேலை செய்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை

ஏவுகணை

இந்த சூப்பர் சோனிக் ஏவுகணையானது 7 மீட்டர் நீளம், ஒற்றை நிலை ராக்கெட் வழிகாட்டுதலுடன், வழி செலுத்தும் அமைப்பை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டம்

திட்டம்

இதே போன்று ஏவுகணைகளை உருவாக்கி இந்தியாவின் முக்கிய நகரங்களை பாதுகாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கு

இலக்கு

முதல் கட்டமாக எதிரிகளின் ஏவுகணைகளை 2000 கிலோ மீட்டர் தொலைவிலேயே தாக்கும் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2007

2007

அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ் வகை ஏவுகணைகள் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு முதல் சேதனை செய்யப்பட்டு வருகின்றது.

வெற்றி

வெற்றி

இந்தியாவில் இந்த வகை ஏவுகணைகள் சுமார் 11 முறை சோதனை செய்யப்பட்டதோடு இரு ஏவுகணைகள் சுமார் எட்டு மாத இடைவெளியில் சோதனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
India Tests Supersonic Advanced Air Defense Missile. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்