நிலத்தில் இருந்து ஏவக்கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி.! முழு விவரம்.!

|

டிஆர்டிஓ அமைப்பு தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து இ

குறிப்பாக ஓடிசாவில் இருக்கும் அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!

 இந்தியாவின்

மேலும் இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி, இந்தியாவின் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்களை எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் 'சாப்' எனும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

வெறித்தனமான தள்ளுபடி- அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% தள்ளபடி- பாதி விலையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம்வெறித்தனமான தள்ளுபடி- அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 47% தள்ளபடி- பாதி விலையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம்

ஜோத்பூர் மற்றும் புனேவில்

வெளிவந்த தகவலின்படி, ஜோத்பூர் மற்றும் புனேவில் இருக்கும் டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்கள் இணைந்து போர் விமானத்தில்
பொருந்தும் வகையிலான சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ என்ற கருவியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ கருவியில் சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார்த் துகள்கள் லட்சக்கணக்கில்அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3499 மட்டும் ஒதுக்கி வச்சுக்கோங்க- தீபாவளிக்கு வரும் 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட்: ப்ரீமியம் திறன்கள் பாஸ்!ரூ.3499 மட்டும் ஒதுக்கி வச்சுக்கோங்க- தீபாவளிக்கு வரும் 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட்: ப்ரீமியம் திறன்கள் பாஸ்!

போர் விமானம் பறந்து

குறிப்பாக போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது இந்த துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்கவிடுவதன் மூலம், தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணையை ரேடார் உதவியுடன் எளிமையாக திசை திருப்ப முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த கருவி மூலம் போர் விமானத்தின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும். இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் போர் விமானத்திற்கு சிறந்த பாதுகாப்பை கொடுக்கிறது சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ கருவி. குறிப்பாக இதேபோன்று பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது இந்த டிஆர்டிஓ அமைப்பு.

JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?

 சில மாதங்களுக்கு முன்பு இந்த டிஆ

அதாவது சில மாதங்களுக்கு முன்பு இந்த டிஆர்டிஓ அமைப்பு நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட்சோதனையை பாதுகாப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக நடத்தியது. ஒடிஸா மாநிலத்தில் இருக்கும் பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் மொத்தம் 25 பினாகா ராக்கெட்டுகளை ராக்கெட் ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டுசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
அதேபோல் நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கினஎன்று கூறப்படுகிறது.

போதுமான இளம்பெண்கள் இல்லையே: டேட்டிங் ஆப் மீது ஆத்திரமடைந்து வழக்கு தொடர்ந்த இளைஞர்!போதுமான இளம்பெண்கள் இல்லையே: டேட்டிங் ஆப் மீது ஆத்திரமடைந்து வழக்கு தொடர்ந்த இளைஞர்!

 டிஆர்டிஓ அமைப்பு இன்னும் அதிநவீன

அதேபோல் டிஆர்டிஓ அமைப்பு இன்னும் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அக்னி-5 ஏவுகணை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இதுபோன்ற ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
India tests Agni-V missile with a range of 5,000 km: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X