Home
News

அடேங்கப்பா.. மின்னல் வேகம்- பீரங்கிகளை அழிக்கும் ஹெலினா ஏவுகணை சோதனை: வெற்றி.!

டிஆர்டிஓ (DRDO) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது நமது நாட்டின் படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் பல ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது டிஆர்டிஓ (DRDO).

டி சமீபத்தில் ஹெலினா ஏவுகணை

அதன்படி சமீபத்தில் ஹெலினா ஏவுகணை லடாக்கில் பனிமலை பகுதிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் பாலைவனத்தில் ஏற்கெனவே இது பரிசோதனை செய்யப்பட்டது.

 இந்த ஹெலினா ஏவுகணை உலகின்

குறிப்பாக இந்த ஹெலினா ஏவுகணை உலகின் மிகவும் மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்று. அதேபோல் மூன்றாம் தலைமுறை ஏவகணையான இது, இரவு பகல் என்று எந்த நேரத்திலும் சென்று தாக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் லடாக்கின் பனி படர்ந்த மலைப் பிரதேசங்களில் ஹெலினாவை ஏவி சோதனை நடத்தப்பட்டது, குறிப்பாக இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் முன்னிலையில் விஞ்ஞானிகள் குழு இந்த சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட இந்த

குறிப்பாக ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட இந்த ஏவுகணை தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கியை துல்லியமாகத் தாக்கி அழித்து என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பரிசோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, இது இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.

அதிநவீன ஏவுகணை ஆனது 500 மீட்டர்

இந்த அதிநவீன ஏவுகணை ஆனது 500 மீட்டர் தூரத்திலிருந்து 7 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்
தரை மட்டத்தில் பறந்து சென்று பீரங்கி மற்றும் கவச வாகனங்களை முன்புறமாகவும் அழிக்கும் திறமை கொண்டது.

மேலும் இன்ஃப்ரா ரெட் இமேஜை அடிப்படையாக வைத்தே இந்த ஏவுகணை இலக்கை தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இலக்குஎது என்று தீர்மானித்துவிட்டு ஏவினால் மட்டுமே போதுமானது. இலக்கை தாக்கும் வரை இதற்கு வழிகாட்டத் தேவையில்லை, குறி தவறாமல்
போய்த் தாக்கிவிடும்.

இதற்கு முன்பு ரஷ்யத் தயாரிப்பான

அதேபோல் இதற்கு முன்பு ரஷ்யத் தயாரிப்பான ஷ்ட்ராம் ஏவகணைகளையே பயன்படுத்தி வந்தோம். தற்போது அதைவிட அதிக தூரம் சென்று இலக்கை மிகவும் துல்லியமாகத் தாக்கும் தன்மை கொண்டது இந்த ஹெலினா. குறிப்பாக இந்திய ராணுவமும் விமானப்படையும் இனி இதைப்பயன்படுத்தப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போன்ற அருமையான ஏவுகணைகளைத்

பிரம்மோஸ் போன்ற அருமையான ஏவுகணைகளைத் தயாரித்த இந்திய விஞ்ஞானிகள் குழு தான் இந்த ஹெலினாவையும் உருவாக்கியுள்ளது. மேலும் சுதேசியாக ஆயுதங்களை தயாரிப்பதன் மூலம் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை மிச்சம் செய்ய முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
India successfully tests indigenous missile Helena: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X