Home
News

இந்தியாவில் ஹைபர்சோனிக் ராக்கெட் சோதனை வெற்றி: பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு!

ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட ஹைபர் சோனிக் வாகனம் வினாடிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் 20 வினாடிகளுக்கு மேல் பறந்தது. இதை விஞ்ஞானிகள் வரலாற்று பணி என கூறுகின்றனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ராக்கெட் இந்தியா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால ஏவுகணை அமைப்பு மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தக் கூடிய அமைப்பு இது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்டது.

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளம்

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளம்

ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளத்தில் இருந்து ஹைபர்சோனிக் ராக்கெட் வெற்றிக்கரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பெரிய பாய்ச்சல் என்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் கூறப்படுகிறது.

ஒலியைவிட 6 மடங்கு வேகம்

ஒலியைவிட 6 மடங்கு வேகம்

ரஷ்யா, சீனா போட்டிப்போட்டுக் கொண்டு ஹைபர்சோனிக் ராக்கெட்டுகளை தயாரிக்கிறது ரஷ்யா, சீனா, அமெரிக்காவை அடுத்து ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் சோதனை இந்தியா மேற்கொண்டுள்ளது. ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட 6 மடங்கு விரைந்து சென்று தாக்கும் சக்தி கொண்டது.

டிஆர்டிஓ, ஆராய்ச்சி நிறுவனம்

டிஆர்டிஓ, ஆராய்ச்சி நிறுவனம்

டிஆர்டிஓ, ஆராய்ச்சி நிறுவனம் இந்த நிகழ்வை ஒரு வரலாற்று பணி என அழைத்தது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பெரிய பாய்ச்சல் என்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் என்று டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ்ரெட்டி கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இந்தியா

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இந்தியா

இந்த சோதனை இன்னும் பல முக்கிய தொழில்நுட்பங்கள், ஹைப்பர்சோனிக் வாகனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனை நிரூபித்த நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இந்தியா இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிக உயரத்தில் பறக்கும்

மிக உயரத்தில் பறக்கும்

ஹைபர்சோனிக் குறித்த விளக்கம் பார்க்கையில், ஏரோடைனமிக்ஸ் துறையில் ஒலியின் வேகத்தை மிஞ்சக்கூடிய வேகமே ஹைபர்சோனிக் எனப்படுகிறது. ராக்கெட் பூஸ்டட், அதாவது கடலில் இருந்தோ தரையில் இருந்தோ செலுத்தப்படக் கூடிய ராக்கெட் பூஸ்டட் உந்துச்சக்தி பெரும் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளோ ராக்கெட்டுகளோ மிகவும் உயரமாக பறக்கக் கூடியது.

வேகமாக பாயும் திறன்

வேகமாக பாயும் திறன்

ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மணிக்கு 3000 மைல்கள் முதல் 10,000 மைல்கள் வரை வேகமாக பாயும் திறன் கொண்டது. சோதனை குறித்து பார்க்கையில் அக்னி ஏவுகணை பூஸ்டர் ஹைபர்சோனிக் வாகனத்தை 30 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்து சென்றபிறகு ஹைப்பர்சோனிக் வாகனத்தை தனியாக பிரித்தது. அதன்பின் ஸ்கிராம்ஜெட் என்ஜின் அதிவேகத்தில் உந்தப்பட்டு ஒலியின் வேகத்தைவிட 6 மடங்கு வேகமாக பாய்ந்தது.

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி., டிஆர்டிஓவின் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தார். குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே இந்த ஹைபர்சோனிக் சோதனை வெற்றிக் கண்டுள்ளது எனவும் அதில் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்

அதேபோல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு வாழத்துகள் தெரிவித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட் செய்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தை நினைவாக்கும் விதமாக இந்த சோதனை அமைந்துள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
India Successfully Tested Hypersonic Technology: Prime Minister Narendra Modi Congratulated DRDO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X