சத்தமில்லாமல் இந்தியா நடத்திய அதிநவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகனை சோதனை: வெற்றி.!

|

இந்தியா நடத்திய லேசர் வழிகாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை ஆனது வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதால் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

கூறப்படும் ராணுவ ஆராய்ச்சி

டி.ஆர்.டி.ஓ. என்று கூறப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அங்கமாக மாரட்டிய மாநிலம், புனேயில் அமைந்துள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அங்குள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து லேசர் வழிகாட்டும் டாங்கி தடுப்பு ஏவுகனையை உள்நாட்டில் தயாரித்துள்ளது.

வுகணை லேசர் வழிகாட்ட சு

அதன்படி இந்த ஏவுகணை லேசர் வழிகாட்ட சுமார் 4 கி.மீ தொலைவுக்கு சென்று எதிரியின் டாங்கியையும்,ராணுவ கவச வாகனங்களையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும்.

ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ

இந்த அசத்தலான ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மூன்றாம் தலைமுறை டாங்கியான அர்ஜூனில் பொருத்தி ஏவி சோதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

Samsung கேலக்ஸி S20 FE: 6 நிறங்களில் கலர் ஃபுல்லாக அறிமுகம்! அடி தூள் அம்சங்கள்!Samsung கேலக்ஸி S20 FE: 6 நிறங்களில் கலர் ஃபுல்லாக அறிமுகம்! அடி தூள் அம்சங்கள்!

மாநிலம்,அகமதுநகர் கவச மையம் மற்றும் பள்ளியின் கே.கே

அதன்படி நேற்று மாரட்டிய மாநிலம்,அகமதுநகர் கவச மையம் மற்றும் பள்ளியின் கே.கே ரேஞ்சஸில் நிறுத்தப்பட்டிருந்த அர்ஜூன் டாங்கியில் லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை பொருத்தி ஏவப்பட்டது. பின்பு இந்த ஏவகணை ஆனது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழித்ததாக அதிகரிகள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வுகணை சோதனை வெற்றி

மேலும் இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய மகிழச்சியை தந்துள்ளது. பின்பு இதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் குழுவை பாராட்டி ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

155 பேஸ்புக் கணக்குகள், 11 பக்கங்களுக்கு தடை: பேஸ்புக் நடவடிக்கை., எதற்கு தெரியுமா?155 பேஸ்புக் கணக்குகள், 11 பக்கங்களுக்கு தடை: பேஸ்புக் நடவடிக்கை., எதற்கு தெரியுமா?

தெரிவித்தது என்னவென்றால்,

ட்விட்டரில் அவர் தெரிவித்தது என்னவென்றால், இந்தியா வெற்றிகரமாக லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்திய முடித்திருப்பதற்கு டி.ஆர்.டி.ஓ-வுக்கு வாழ்த்துக்கள் என்றும், எதிர்காலத்தில் இறக்குமதி சார்பு நிலையை குறைக்கும் வகையில் உறுதியுடன் செயல்படுகிற ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் குழுவால் இந்தியா பெருமை கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

 பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு

மேலும் பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுடனும் எல்லையில் பிரச்சனைகளையும், மோதல்களையும் சந்தித்து வருகிற நிலையில் இந்த லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகனையானது இந்திய ராணுவத்தின் தாக்குதல் பலத்தை மேம்படுத்தும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India Successfully Test Fires Laser-Guided Anti-Tank Missile: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X