இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணைகள் ஹெலினா மற்றும் துருவஸ்திரா சோதனை..
இந்தியா சமீபத்தில் புதிய ரக ஏவுகணைகள் மற்றும் இராணுவ மேம்படுதலை மேம்படுத்தும் நோக்கத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயார் செய்து அதை மும்முரமாகச் சோதனை செய்து வருகிறது. அந்த வரிசையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) இப்போது ஹெலினா மற்றும் துருவஸ்திரா என்ற 2 அதிநவீன ஏவுகணைகளைத் தயாரித்துள்ளது.

இந்தியாவின் இராணுவ பலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) இப்போது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஹெலினா' மற்றும் ‘துருவஸ்திரா' என்ற 2 ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. இது ஏவுகணை அதிநவீன தொழில்நுட்பத்தால் அனைத்து நேரத்திலும், அனைத்து வானிலையிலும் செயல்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன அம்சத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைகளின் சோதனை நேற்று ஒரு பாலைவன பகுதியில் நடைபெற்றது. இந்த சோதனையின் போது ராணுவத்தின் விமானப்படையின் பயன்பாட்டுக்கான ஹெலினா, மற்றும் துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் விமானப்படையிலிருந்து புறப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அதிகாரிகள் மகிழ்ச்சிப்பட தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஏவுகணைகள் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறுகிய தூர இலக்கு, நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லா வகையிலும் ஹெலினா மற்றும் துருவஸ்திரா ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன, ஆயுதங்கள் பொருத்தி, கைவிடப்பட்ட டேங்குகள் மீது ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications