Home
News

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

இந்தியாவின் பெருங்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளது. இதனால் தனக்கு மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று பாகிஸ்தான் விடிவிடிய ஒப்பாரி

இந்தியாவின் அணு ஆயுதம் பலம் வளர்ச்சியடைந்து கொண்டடே போகின்றது. மற்றொரு புறம் மற்ற நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவிலும் உள்நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் அணு ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவால் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களும், தொழில் நுட்ப உபகரணங்களும் சோதனையிலும் வெற்றி நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றன.

இந்தியாவின் பெருங்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளது. இதனால் தனக்கு மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று பாகிஸ்தான் விடிவிடிய ஒப்பாரி வைக்க துவங்கியுள்ளது.

 ஐஎன்எஸ் அரிஹந்த்:

ஐஎன்எஸ் அரிஹந்த்:

அணு ஆற்றலில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடிந்துள்ளது. இது மற்ற நாடுகளில் உள்ள போர் கப்பல்களுக்கும் இது சவால் விடும் வகையில் இருக்கின்றது.

6 ஆயிரம் டன் எடை:

6 ஆயிரம் டன் எடை:

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது.

தெற்காசியாவில் முதல் இயக்கம்:

தெற்காசியாவில் முதல் இயக்கம்:

ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இதனால் மற்ற நாடுகளும் இதனை கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் நிலை கண்டு மற்ற நாடுகளும் அடிக்க வாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்றிகரமாக சோதனை:

வெற்றிகரமாக சோதனை:

இந்திய பெருங்கடல் பகுதியில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அண்மையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இந்தியா இயக்கி அந்த செயல்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்து இருக்கின்றது.

ரோந்து பணி நிறைவு:

ரோந்து பணி நிறைவு:

இந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார். தற்சமயம் முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை:

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை:

இந்தியா அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகள் ரூ.36,000 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இது ஓரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. இதை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் கதறின.

சீனாவுக்கு போட்டி:

சீனாவுக்கு போட்டி:

இந்தியா ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து தனது ராணுவத்திலும் சேர்த்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் தனது சூப்பர் சோனிக்கு ஏவுகணையை சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதற்கு தக்கபதிலடியாக கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது எதிரிநாட்டு ஏவுகணைகளையும் வானில் இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது.

 இந்தியாவின் அணு ஆயுத பலம்:

இந்தியாவின் அணு ஆயுத பலம்:

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு தனது சொந்த ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், இந்தியா தற்போது ஏராளமான ஆணு ஆயுதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியா கண்டு நடுங்கின்றன.

பாகிஸ்தான்  ஒப்பாரி :

பாகிஸ்தான் ஒப்பாரி :

இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் இயக்கச் செயல்பாடு, தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் ஒப்பாரி வைத்து வருகின்றது.

இந்தியா மீது அணு ஆயுத போர் : கூட்டு சேரும் பாக் - அமெரிக்கா..?!

இந்தியா மீது அணு ஆயுத போர் : கூட்டு சேரும் பாக் - அமெரிக்கா..?!

சூப்பர் பவர் நாடுகளே, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நவீன ஆயுதம், அணு ஆயுதம் என அழிவு சக்திகளை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளும்போது, வளரும் நாடான மற்றும் தீவிரவாத உற்பத்தி கிடங்கு என்று நம்பப்படும் பாகிஸ்தான், அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியையும், அறிவியலையும் அழிவு சக்திகாக பயன்படுத்துவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அப்படியாக சமீப காலங்ககளாக அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான் காட்டும் அதீத ஆர்வமானது பிற உலக நாடுகளை சற்று சந்தேகிக்க வைத்துள்ளது, உஷார் நிலையை உருவாக்கி உள்ளது என்று கூட சொல்லாலம், முக்கியமாக இந்தியாவை..!

கருத்து :

கருத்து :

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஐஸாஸ் சௌதிரி (Aizaz Chaudhry ) தங்கள் நாட்டின் அணு ஆயுதம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

விளைவு  :

விளைவு :

அதில் பாகிஸ்தான் குறைந்த அளவு விளைவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

'கோல்ட் -ஸ்டார்ட்' கொள்கை :

'கோல்ட் -ஸ்டார்ட்' கொள்கை :

மேலும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ள இந்திய ராணுவத்தின் கொள்கையான 'கோல்ட் -ஸ்டார்ட்' (Cold-start doctrine) தான் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்க காரணம் என்றும் அறிவித்துள்ளார்.

முதல் முறை :

முதல் முறை :

பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தந்திரமான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதை பற்றி விளக்கம் அளித்துள்ளதும், மேலும் அது பாதுகாப்பிற்க்காக என்று கூறுவதும் இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத ஒப்பந்தம் :

அணு ஆயுத ஒப்பந்தம் :

மேலும் பாகிஸ்தான் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது எந்த விதமான அணு ஆயுத ஒப்பந்தமும் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பு :

சந்திப்பு :

அக்டோபர் 22 ஆம் தேதி அதாவது நாளை அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல் :

தகவல் :

ஆனால், அமெரிக்க அரசு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றுல் பாகிஸ்தானை கையெழுத்திட வைக்க அறிவுறுத்த போவதாக சில அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது.

அணு வழங்கும் குழு :

அணு வழங்கும் குழு :

அமெரிக்காவின் திட்டப்படி பாகிஸ்தான் உடன் அணு ஆயுத ஒப்பந்தம் நடந்தால் பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரம் அணு வழங்கும் குழுவில் (Nuclear Suppliers Group) இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 போர் நோக்கம் :

போர் நோக்கம் :

மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்தி யானது முழுக்க முழுக்க குற்றங்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு விடயங்கள் சார்ந்த ஒன்றே தவிர, போர் நோக்கத்தினால் அல்ல என்பதை திட்டவட்டமாக ஐஸாஸ் சௌதிரி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
India slams Pakistan for expressing concern over deployment of INS Arihant : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X