நிறைவேறுகிறது : இந்தியாவின் லட்சிய திட்டம்..!
பொதுவாக ஒரு நாட்டு ராணுவத்திற்குள் நடக்கும் விடயங்களும், திட்டங்களும், செயல் நோக்கங்களும் பாதுகாப்பு காரணங்கள் கருதி வெளியிடப்படுவது இல்லை. இருப்பினும், சில சமயங்களில் 'சில' ராணுவ வளர்ச்சி சார்ந்த விடயங்களை வெளியிடுவதிலும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.
அப்போது தான், போர் நோக்கத்தோடு திரியும் அண்டை நாடுகளும் சரி, "நாம் தான் ராணுவ ஜாம்பவான்" என்று நினைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் பவர் நாடுகளும் சரி - பிற நாட்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்வதோடு சற்று நிதானமாய் யோசிக்கவும் செய்யும்..!

கனவு திட்டம் :
அப்படியாக, இந்தியாவின் மிக நீண்ட நாள் - பாதுகாப்பு - கனவு திட்டம் ஒன்று தற்போது நிஜமாக உள்ளது.

இந்தியா :
அதாவது, போர் புரியும் ஆளில்லா உளவு ட்ரோன்களை (stealth combat drones) இந்தியா சொந்தமாக தயாரிக்க இருக்கிறது.

உளவு :
இவ்வகையான ஆளில்லா உளவு ட்ரோன்கள், அன்மேன்டு காம்பாட் ஏரியல் வெயிக்கல்ஸ் (unmanned combat aerial vehicles - UCAV) என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறன் :
இவ்வகை உளவு ட்ரோன்கள் எதிரிகளின் இலக்குகளை துல்லியமான வழிகாட்டி (precision-guided munitions) மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துவிட்டு
மீண்டும் தளங்களுக்கு திரும்பும் திறன் கொண்டவைகள் ஆகும்.

நிதி :
'இந்திய ஆளில்லா ஸ்ட்ரைக் ஏர் வாகனம்' (Indian Unmanned Strike Air Vehicle) திட்டத்ற்க்கு 'ப்ராஜக்ட் கஹடக்' (Project Ghatak) என்ற பெயரின் கீழ் ரூ.2650 கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உறுதி :
மேலும் இந்த திட்டமானது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

தொடக்கம் :
2009-ஆம் ஆண்டு ரூ.12.50 கோடி செலவில் ஒப்புதல் பெற்று நடத்தப்பட்ட ஆரா (AURA - autonomous unmanned research aircraft) என்ற ஆராய்ச்சி தான் ப்ராஜக்ட் கஹடக்-ன் தொடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசைன் :
ஒரு சாராசரி போர் விமானத்தின் எடையை விட குறைவாக டிசைனில் வடிவமைக்கப்பட இருக்கும் இந்த ஆளில்லா உளவு ட்ரோன்கள் அதிக பறக்கும் திறன் கொண்டவைகளாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை :
அதுமட்டுமின்றி இவ்வகை ஆளில்லா உளவு ட்ரோன்களின் மிகவும் மேம்பட்ட திறன் ஆனது நவீன கால யுத்தங்களின் வலிமை மிக்க தந்திரமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ப்ரடேடர் மற்றும் ரீப்பர் :
மேலும் அமெரிக்கா, செயற்கைகோள்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும் ட்ரோன்களன ப்ரடேட்டர் (Predator) மற்றும் ரீப்பர் (Reaper) வகை ட்ரோன்களை பயன்பாட்டில் வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications