அசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..!

Posted By:

சூப்பர் பவர் நாடுகள் தொடங்கி குட்டி நாடுகள் வரை, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு நாளுக்கு நாள் வியந்து கொண்டே இருக்கிறது என்பது தான் நிதர்சனம், முக்கியமாக விண்வெளி துறை வளர்ச்சியை கண்டு வாய் பிளக்கிறது என்றே கூறலாம்..!

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

அடுத்த வாரம் இந்தியா அடைய இருக்கும் ஒரு புதிய மைல்கல் தான் அதற்கு சாட்சி. வெறும் 25 நிமிடங்களில் மொத்தம் 6 அந்நிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்து கேட்ட உதவியை செய்து முடிக்க இருக்கிறது இஸ்ரோ..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாதனை :

சாதனை :

பிற நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல் சாதனையை அடைய இருக்கிறது.

விரைவில் :

விரைவில் :

அதாவது இந்தியாவின் இஸ்ரோ விரைவில் 50-க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது என்ற பெருமையை பெற இருக்கிறது..!

இஸ்ரோ :

இஸ்ரோ :

அடுத்த வாரம் 6 அந்நிய நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ, அதன் மூலம் இந்த சாதனையை அடைய இருக்கிறது இஸ்ரோ..!

அமெரிக்கா :

அமெரிக்கா :

சமீபத்தில் அமெரிக்கா தங்களது 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை நாடி இருந்தது குறிப்பிடத்தக்கது..!

இந்தோனேஷியா :

இந்தோனேஷியா :

அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியாவும் இஸ்ரோவின் உதவியை நாடியது.

உதவி :

உதவி :

அதன் அடிப்படையில், அமெரிக்காவின் 4 செயற்கைகோள்களும், இந்தோனேஷியாவின் 1 செயற்கைகோளும், கனடா நாட்டின் செயற்கைகோள் ஒன்றும் என மொத்தம் 6 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ..!

இணைப்பு :

இணைப்பு :

இந்த 6 செயற்கை கோள்களும் ஆஸ்ட்ரோசாட் உடன் இணைக்கப்பட்டு இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது..!

பிஎஸ்எல்வி :

பிஎஸ்எல்வி :

44.4 மீட்டர் உயரமும், சுமார் 320.2 டன் எடையும் கொண்ட இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த திங்கள் அன்று 10 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

ஆஸ்ட்ரோசாட் :

ஆஸ்ட்ரோசாட் :

அது மட்டுமின்றி, பிஎஸ்எல்வி-யின் உள் இருக்கும் ஆஸ்ட்ரோசாட் சுமந்து செல்லும் செயற்கைகோள்களின் மொத்த எடை 1631 கிலோ என்பதும், ஆஸ்ட்ரோசாட்டின் எடை 1513 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளி தள்ளும் :

வெளி தள்ளும் :

விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சுமார் 22 நிமிடங்கள் கழித்து, அதாவது பூமியை விட்டு சுமார் 650 கிலோ மீட்டர்கள் தாண்டி சென்று ஆஸ்ட்ரோநாட்டை வெளி தள்ளுமாம்..!

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

அதை தொடர்ந்து உடனடியாக 6 செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்படுமாம்..!

வேலை :

வேலை :

இந்த ஒட்டு மொத்த வேலையும் சுமார் 25 நிமிடங்களில் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளது இஸ்ரோ..!

மொத்தம் :

மொத்தம் :

இதுவரை இந்தியா, மொத்தம் 45 அந்நிய நாட்டு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here about India Set to Cross Half Century Mark in Launching Foreign Satellites. Read more about this Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot