இந்தியாவின் 2021 டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: டாப்பும் இந்த துறைதான்., முடிவும் இந்த துறைதான்!

|

2021 ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி மூன்று இந்தியர்கள் மட்டும் அவர்களுக்கு இடையே சுமார் 100 பில்லியன் டாலர்கள் சேர்த்துள்ளனர் எனவும் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 102-ல் இருந்து தற்போது 140 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் மொத்த செல்வம் சுமார் 596 பில்லியன் டாலர்களாக இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலிடத்தில் முகேஷ் அம்பானி

முதலிடத்தில் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2021 இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை பார்க்கலாம்.

84.5 பில்லியன் டாலர்கள் உடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அம்பானி நிதி திரட்டலில் சாதனையை நிகழ்த்தினார். பேஸ்புக், கூகுள் போன்ற முதலீட்டாளர்களை ஈர்த்தார்.இதன்மூலம் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆக உயர்ந்தது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி

அதேபோல் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி சுமார் 50.5 பில்லியன் டாலர் உடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதானி க்ரீன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் வெறித்தனமாக உயர்ந்ததையடுத்து அவரது சொத்து மதிப்புகள் அதிகரித்தது. சுமார் 3 லட்சத்து 70 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இதடத்தில் இருக்கிறார். கடந்த செப்டம்பரில் நாட்டின் இரண்டாவது பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 74% பங்குகளை அதானி வாங்கியது குறிப்பிடத்தக்கது

மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஷிவ் நாடார்

மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஷிவ் நாடார்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஷிவ் நாடார். இவரது நிகர சொத்து மதிப்பு 23.5 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்திய மதிப்புப்படி ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். எச்சிஎல் டெக்னாலஜிஸின் தலைவர் பதவியில் இருந்து விலகி இந்த பதவியை தனது ஒரே மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்தார்.

ராதாகிஷன் தமானி நான்காம் இடம்

ராதாகிஷன் தமானி நான்காம் இடம்

ராதாகிஷன் தமானி நான்காம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 16.5 பில்லியன் டாலராகும். அவன்யூ சூப்பர் மார்க்கெட் அதிபர் ராதாகிஷன் தமானி ஆவார். இவர் குறைந்த சுயவிவர சில்லறை விற்பனையாளரின் பட்டியலிடப்பட்ட சூப்பர் மார்க்கெட் சங்கிலியாக அவன்யூவை உருவாக்கியவர். இது நாடு முழுவதும் 221 டிமார்ட் கடைகளை கொண்டுள்ளது. இவரது சகோதரர் கோபிகஷனும் கோடீஸவரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் இடத்தில் உதய் கோடக்

ஐந்தாம் இடத்தில் உதய் கோடக்

ஐந்தாவது இடத்தில் இருப்பவர் உதய் கோடக் ஆவார். இவரது சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலராகும். இவரது செல்வ ஆதாரம் வங்கி ஆகும். கோடக் மஹேந்திரா வங்கியை நிறுவி நடித்தி வருகிறார். இது தனியார் துறை வங்கிகளில் நாட்டில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆறாவது இடத்தில் லட்சுமி மிட்டல்

ஆறாவது இடத்தில் லட்சுமி மிட்டல்

ஆறாவது இடத்தில் இருப்பவர் லட்சுமி மிட்டல். இவரது சொத்து மதிப்பு 14.9 பில்லியன் டாலராகும். சமீபத்தில் எஃகு பெஹிமோத் ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி இந்த இடத்தை அவரது மகன் ஆதித்யாவுக்கு வழங்கினார்.

ஏழாவது இடத்தில் குமார் பிர்லா

ஏழாவது இடத்தில் குமார் பிர்லா

ஏழாவது இடத்தில் இருப்பவர் குமார் பிர்லா. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 12.8 பில்லியன் டாலராகும். பிர்லா தொலைத் தொடர்பு விரிவாக்கம் செய்வதன் மூலம் அவருக்கு மிகவும் செலவாகியது. பரந்த சாம்ராஜ்யத்தின் நான்காம் தலைமுறை வாரிசு இவராவார்.

சைரஸ் பூனவல்லா எட்டாவது இடத்தில்

சைரஸ் பூனவல்லா எட்டாவது இடத்தில்

சைரஸ் பூனவல்லா எட்டாவது இந்திய பணக்காரர்கள் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 12.7 பில்லியன் டாலராகும். உலகின் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பூனவல்லாவின் சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவின் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் இருக்கிறது.

ஒன்பதாவது இடத்தில் திலீப் ஷாங்க்வி

ஒன்பதாவது இடத்தில் திலீப் ஷாங்க்வி

ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் திலீப் ஷாங்க்வி ஆவார். இவரது சொத்து மதிப்பு 10.9 பில்லியன் டாலராகும். ஜெனரிக்ஸ் மருந்து தயாரிப்பாளரான சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

பத்தாவது இடத்தில் சுனில்மிட்டல்

பத்தாவது இடத்தில் சுனில்மிட்டல்

பத்தாவது இடத்தில் இருப்பவர் சுனில் மிட்டல் மற்றும் குடும்பம். இவரது சொத்து மதிப்பு 10.5 பில்லியன் டாலராகும். இவரது வருவாய் ஆதாரம் தொலைத் தொடர்பு துறை ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India's Top 10 Richest Persons List in 2021: Reliance Industries Mukesh Ambani is the Top Place

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X