Home
News

வாட்ஸ்அப் புதிய விதிகளை ஏற்கவில்லை என்றால் என்னவாகும்? இந்திய தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் மீது நடவடிக்கையா

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் திங்களன்று, மெசேஜ்ஜிங் தொழில்நுட்ப பயன்பாட்டின் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து இந்திய நாட்டின் தொழில்நுட்ப அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு நிறுவனம் இப்போது பதில் அளித்துள்ளது. வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள பதிலில் 'பயனர்களின் தனியுரிமை' தான் மிகவும் முக்கியம் என்றும், அதன் முன்னுரிமை எப்போதும் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பிற்காகத் தான் வழங்கப்பட்டு வருகிறது என்று நிறுவனம் இந்திய அரசிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை

வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை

மே 15 முதல் நடைமுறைக்கு வந்த வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை வாபஸ் பெறுமாறு இந்தியாவின் தொழில்நுட்ப அமைச்சகம் மே 18 ஆம் தேதி வாட்ஸ்அப் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடிதத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் மீது அரசு சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் தனது தெளிவான விளக்கத்தையும், பதிலையும் வெளியிட்டுள்ளது.

பயனர்களின் தனியுரிமையே மிக உயர்ந்த முன்னுரிமை

பயனர்களின் தனியுரிமையே மிக உயர்ந்த முன்னுரிமை

வாட்ஸ்அப் கூறியதாவது, "நாங்கள் இந்திய அரசின் கடிதத்திற்குப் பதிலளித்துள்ளோம், பயனர்களின் தனியுரிமை எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்று அவர்களுக்கு உறுதியளித்துள்ளோம்" என்று நிறுவனம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய புதுப்பிப்பு மக்களின் தனிப்பட்ட செய்திகளின் தனியுரிமையை மாற்றவில்லை என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் என்னவாகும்?

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் என்னவாகும்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் அதன் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தனது பயனர்களைக் கட்டாயப்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் பயனர்களின் கணக்கு முடக்கம் செய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால் நிறுவனத்தின் தரவு பகிர்வு நடைமுறைகள் குறித்து உலகளாவிய பயனர்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பை தொடர்ந்து புதிய வணிக அம்சங்களை மே மாத நடுப்பகுதியில் செயல்படுத்த நிறுவனம் தாமதப்படுத்தியது.

இதை நாங்கள் இப்போது செய்யப்போவதில்லை..  அதற்குப் பதிலாக இதை மட்டும் செய்வோம் - வாட்ஸ்அப்

இதை நாங்கள் இப்போது செய்யப்போவதில்லை.. அதற்குப் பதிலாக இதை மட்டும் செய்வோம் - வாட்ஸ்அப்

இப்போது, இந்தியத் தொழில்நுட்ப அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு நிறுவனம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், வரவிருக்கும் வாரங்களில் வாட்ஸ்அப் எவ்வாறு செயல்படும் என்பதையும் நிறுவனம் விளக்கியுள்ளது. முன்னர் தெரிவித்தது போல் வாட்ஸ்அப் செயல்பாட்டை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம், அதற்குப் பதிலாக, புதுப்பிப்பைப் பற்றி பயனர்களுக்கு அவ்வப்போது வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் செய்திகள் மூலம் நினைவூட்டுவோம்" என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரிய விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்

இந்தியாவில் பெரிய விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்

இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையாகும். இங்கு 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதன் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நிறுவனம் இந்தியாவில் பெரிய விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளது. பேஸ்புக் மற்றும் அதன் குழு நிறுவனங்களுடன் வரையறுக்கப்பட்ட பயனர் தரவைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை, இந்தியாவில் ஒரு சட்டப் போருக்கு வழிவகுத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்கு எதிரான கட்டுப்பாட்டாளரும் வாட்ஸ்அப்பை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India s technology ministry asked WhatsApp to withdraw its updated privacy policy : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X