அது எங்களுக்கு பொருந்தவே பொருந்தாதே: கூகுள் உயர்நீதிமன்றத்தில் வாதம்!

|

கடந்த மாதம் பிற்பகுதிமுதல் நடைமுறைக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021, அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்துக்கு பொருந்தாது. இது சமூகவலைதளம் அல்ல, மக்களுக்கும் இணையத்திற்கும் இடையே செயல்படும் ஒரு அமைப்பு என கூகுள் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.

நீக்க முடியாத சூழல்

நீக்க முடியாத சூழல்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை நீக்க உத்தரவிட்ட வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றது. பெண் ஆபாச புகைபடங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் புகைப்படத்தை நீக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த வழக்கு விசாரணையில் கூகுள் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்ப்பட்டது.

புதிய டிஜிட்டல் கொள்கை

புதிய டிஜிட்டல் கொள்கை

அதில் இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை இணைய தேடுபொறியான கூகுளுக்கு பொருந்தாது என நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. கூகுள் என்பது சமூகவலைதளம் போன்று செயல்படுவது அல்ல எனவும் மக்களுக்கும் இணையத்திற்கும் இடையே செயல்படும் அமைப்பு எனவும் நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து கூகுள் ஒரு சமூகஊடக அமைப்பு என்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்யும்படி வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து இதுகுறித்து ஜூலை 25-க்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

புதிய விதிகளில் இருந்து விலக்கு

புதிய விதிகளில் இருந்து விலக்கு

கூகுள் தேடுபொறி நிறுவனம்தான், சமூகவலைதளம் அல்ல எனவும் புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதில் சமூகவலைதள நிறுவனங்கள் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணை வலைதளத்தில் பதிவிட வேண்டும், புகார்களை பெறவும் நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவில் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. தாங்கல் சமூகவலைதளம் அல்ல தேடுபொறி என கூகுள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு தங்களுக்கு புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

படத்தை நீக்குவது தொடர்பான உத்தரவு சமூகவலைதளங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூகுள் தேடுபொறி மட்டுமே இதனை நீக்கும் அதிகாரம் இல்லை எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

முன்னதாக., இந்திய அரசு அறிவித்துள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிய பசிபிக் நாடுகளின் செய்தியாளர்கள் பங்கேற்ற காணொலியில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். கூகுள் செயல்படும் அனைத்து நாடுகளிலும் அந்தந்த உள்ளூர் சட்டங்களை எந்த சூழ்நிலையிலும் மதித்தே வந்திருக்கிறது என குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மை வாய்ந்த இணையம்

வெளிப்படைத்தன்மை வாய்ந்த இணையம்

அதுமட்டுமின்றி சுதந்திரமான வெளிப்படைத்தன்மை வாய்ந்த இணையம் என்பது அடிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் இதுபோன்ற அதிக பாரம்பரியம் நிலவுவதற்கும் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமின்றி சுந்தர்பிச்சை இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை குறித்து தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க இயலாது எனவும் குறிப்பிட்டார். மேலும் கூகுள் இந்திய பிரிவினர் இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கையை ஆராய்ந்து வருவதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
India's New IT Rules Didnot Apply to Us: Google Said Delhi High Court

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X