2020 ஜனவரி முதல் இந்தியாவில் இணைய வேகம் குறைய காரணம் என்ன?

|

நம்மில் பெரும்பாலோருக்கு கோவிட் 19 வைரஸ் தாக்குதல் காரணமாக நம் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. வீட்டை விட்டே வெளியேற கூடாது என்ற நிலையில் இணையம் ஒன்று தான் உலகத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஒரே வழியாக உள்ளது..

கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்களில்

நம்முடைய கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்களில் இன்றியமையாத இணையம் மட்டுமே. இந்த நிலையில் உங்கள் இணைய இணைப்பு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய அளவுக்கு தற்போது வேகமாக இயங்கவில்லையா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அது உங்கள் தவறு இல்லை.

வெகுவாக

ஏனெனில் இணைய வேக சோதனை நிறுவனமான ஓக்லாவின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் இணைய வேக வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இதே நிலைதான். மார்ச் 2020 இல், உலகளவில் நிலையான பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இண்டர்நெட் ஆகிய இரண்டிலுமே இணையத்தின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.

சொன்னா சொன்னது தான்., திட்டமிட்டப்படி நடக்கும்: ISRO தலைவர் சிவன் பேட்டி!சொன்னா சொன்னது தான்., திட்டமிட்டப்படி நடக்கும்: ISRO தலைவர் சிவன் பேட்டி!

பிராட்பேண்ட் இணையத்தின் வேகம்

நிலையான பிராட்பேண்ட் இணையத்தின் வேகம் சராசரியாக 39.65 Mbps இலிருந்து 35.98 Mbps ஆக குறைந்துள்ளது. அதேபோல் மொபைல் இணைய வேகம் கணிசமாக 1.68Mbps குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் சராசரியாக பிராட்பேண்ட் வேகம் குறைந்து வருகிறது. ஜனவரியில் 41.48 Mbps இலிருந்து மார்ச் மாதத்தில் 35.98 Mbps ஆக வீழ்ச்சி அடைந்தது.

அதாவது 83.52 எம்.பி.பி.எஸ்

உலகெங்கிலும் உள்ள நாடுகளில், ஐக்கிய அரபு அமீரகம் நாடு தான் மொபைல் இணையத்திற்கான பட்டியலில் முதலிடத்தில் அதாவது 83.52 எம்.பி.பி.எஸ். நிலையான பிராட்பேண்ட் வேகத்தில் உள்ளது. அதேபோல் சிங்கப்பூரில் 197.26 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வேகத்தை கண்டறிந்து தரும் ஒக்லாவின்

இணைய வேகத்தை கண்டறிந்து தரும் ஒக்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி டக் சட்டில்ஸ் என்பவர் இதுபோன்ற கணிசமான இணைய வேக வீழ்ச்சியின் பின்னணிக்கான காரணத்தை கூறும்போது, "கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் திடீரென எந்தவித முன்னேற்பாடு இல்லாமல் ஊரடங்கை அமல்படுத்தியதாகவும், அதன் காரணமாக இணைய வேகம் ஓரளவு மந்தநிலையை அடைவது இயல்பானது என்றும் கூறியுள்ளார்.

நெட்வொர்க்குகள் சிரமங்களை

மேலும் இணையம் மூலம் கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை ஆன்லைனில் அதிகளவில் செய்வதாலும் இணைய வேகத்தின் வேகம் குறைய ஒரு காரணம் என்றும், இதனால் ஒருசில ஐ.எஸ்.பி நெட்வொர்க்குகள் சிரமங்களை சந்திக்கும் என்றும், கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
India's Internet Speed Is Falling Since Jan 2020, Globally Rank 130th For Mobile Data Speed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X