இந்தியாவின் முதல் 'அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில்' ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?

|

மக்களின் போக்குவரத்துக்குச் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்தியா அதன் ரயில் சேவையில் பல மாற்றங்களை மேற்கொண்டு முன்னேறி வருகிறது. இப்போது இந்தியா அதன் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் (Underwater Metro Train) சேவையை துவங்கவிருக்கிறது. ஆம், நீருக்கு அடியில் பயணிக்கும் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்களுக்காக இந்தியா விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

இந்தியாவின் ரயில் சேவை வரலாறு

இந்தியாவின் ரயில் சேவை வரலாறு

இந்தியாவின் ரயில் சேவை வரலாறு மிகவும் சுவாரசியமான பல விஷயங்களை தன்னுள் அடக்கியுள்ளது. இதன் வரலாற்றை முழுமையாகப் புரட்டிப் பார்க்க நமக்கு போதிய நேரம் இல்லாததால், சில தசாப்தங்களில் இந்திய ரயில்வே என்னென்ன மேம்படுத்தல்களைச் செய்துள்ளது என்று சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அண்டர் வாட்டர் ரயில் சேவையின் விபரங்களுக்குச் செல்லலாம். இந்திய ரயில்வே, மீட்டர் கேஜ் (Meter gauge) ரயில்களை நீக்கி, ப்ரோட்வே ரயில்களை அறிமுகம் செய்தது.

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை

அதற்குப் பிறகு டீசல் எஞ்சின்களை, அதிக சக்தி வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலக்ட்ரிக் எஞ்சின் ரயில்களாக இந்திய ரயில்வே மாற்றியது. இதற்குப் பின் மெட்ரோ நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை இந்தியா துவங்கியது. பிறகு பறக்கும் ரயில் திட்டம், சுரங்கப்பாதை திட்டம் என்று பல திட்டங்களை இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையையும் இந்தியா துவங்கியது.

இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை

இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை

ஆம், இந்தியா அதன் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தைக் கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டில் துவங்கியது. இப்போது, இந்த திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. மிக விரைவில் இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்களின் பயனுக்காக இந்தியா திறக்கவுள்ளது என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது. இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை இந்தியாவின் எந்த நகரத்தில் திறக்கப்படவுள்ளது தெரியுமா?

உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!

எங்கிருந்து எங்கு வரை இந்த ரயில் திட்டம் செல்கிறது?

எங்கிருந்து எங்கு வரை இந்த ரயில் திட்டம் செல்கிறது?

இந்தியாவின் முதல் அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் தான் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு வழித்தடமானது, 2006-2007 இல் தொடங்கப்பட்டது. இது 16.6 கிலோமீட்டர் நீளமும், ஹூக்ளி ஆற்றின் கீழ் 500 மீட்டர் நீளம் வரை செல்கிறது. இந்த ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும். இந்த திட்டத்தைக் கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (KMRC) உருவாக்கி வருகிறது.

ட்வின் டனல் மூலம் இயங்கும் அண்டர் வாட்டர் மெட்ரி ரயில் சேவை

ட்வின் டனல் மூலம் இயங்கும் அண்டர் வாட்டர் மெட்ரி ரயில் சேவை

இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை, மத்திய கொல்கத்தா வழியாக ஹவுரா மற்றும் சால்ட் லேக் நிலையங்களை இணைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ட்வின் டனல்கள் 1.4 மீ அகலமுள்ள கான்கிரீட் வளையங்களால் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய ஈர்ப்பே, இதில் உள்ள இந்த ட்வின் டனல்கள் தான். காரணம், இவை அரை கிலோமீட்டர் தூரத்திற்குத் தண்ணீருக்குக் கீழே செல்கிறது. இது பயணிகளுக்கு ஒரு புது வகையான அனுபவத்தை வழங்கவிருக்கிறது.

தண்ணீருக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதை பாதுகாப்பானதா?

தண்ணீருக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதை பாதுகாப்பானதா?

ட்வின் டனல் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நுழைவதைத் தடுக்க, அதில் ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று KMRC தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் போன்ற அவசரநிலைகளுக்கு ஏற்றார் போலச் சுரங்கப்பாதைகளில் வெளியேறும் வழிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அவசரக்காலத்தில் பயணிகளை பத்திரமாக வெளியேற்றுவதற்காகச் சுரங்கப்பாதைகளில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

நீருக்கடியில் ரயில் மாட்டிக்கொண்டால் என்னவாகும்?

நீருக்கடியில் ரயில் மாட்டிக்கொண்டால் என்னவாகும்?

அதேபோல், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் கூட அதற்கும் தீர்வு இருக்கிறது என்று KMRC தெரிவித்துள்ளது. காரணம், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், பயணிகள் அண்டர் வாட்டர் சுரங்கத்திலிருந்து தப்பிக்க உதவும் சிறப்பு வழிகளும், இந்த சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் கான்கிரீட் ஃப்ளை ஆஷ் மற்றும் மைக்ரோ-சிலிக்காவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்கு நிலத்தடி நிலையங்கள் அமைக்கும் கொல்கத்தா

நான்கு நிலத்தடி நிலையங்கள் அமைக்கும் கொல்கத்தா

இந்த இரண்டு பொருட்களும் நீர்ப்புகா மற்றும் நீருக்கடியில் பயன்பாட்டிற்குத் தகுதியான வாட்டர் ரசிஸ்டன்ஸ் தன்மை உடன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த திட்டத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு, எஸ்பிளனேட், மஹாகரன், ஹவுரா மற்றும் ஹவுரா மைதானம் ஆகிய நான்கு நிலத்தடி நிலையங்கள் இத்துடன் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்திற்குள் ஹூக்ளி ஆற்றைக் கடக்கும்

ஒரு நிமிடத்திற்குள் ஹூக்ளி ஆற்றைக் கடக்கும்

மஹாகரன் மற்றும் ஹவுரா நிலையங்களுக்கு இடையில், மெட்ரோ ஒரு நிமிடத்திற்குள் ஹூக்ளி ஆற்றைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (Jica) திட்டத்தின் செலவில் 48.5% முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹவுரா மைதானத்திலிருந்து சீல்டா மெட்ரோ ரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்?

எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்?

இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை 2022 ஆம் ஆண்டில் நிறைவுபெற்று மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தோற்று காரணமாகவும், இன்னும் சில காரணங்களாலும் இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை திட்டம் திட்டமிடப்பட்ட நேரத்தில் முடிவு பெறாமல் போனது. இப்போது, உறுதியாக இந்த அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில் சேவை வரும் 2023 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
India's First Underwater Metro Train Service To Be Operational Soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X