நீருக்கு அடியில் செல்லும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில்.! எங்கு வரப்போகிறது தெரியுமா?

|

இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் கடந்த 1984-ம் ஆண்டு துவங்கப்பட்டது, தற்போது 10 இந்திய நகரங்களில் மெட்ரோ ரியில் சேவை செயல்பாட்டில் உள்ளன. அதில் டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர், குர்கான்,மும்பை, கொச்சி கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ளன.

கொல்கத்தா

கொல்கத்தா

இந்நிலையில் மேற்க வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில், நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோரயில் அமைய உள்ளது. குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு மெட்ரோ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருந்தது,எனினும் பல்வேறு காரணங்களினால் இதில் தாமதம் வந்தது. இதனால் செலவும் அதிகரித்தது. சிக்கல்கள் காரணமாக,மொத்த திட்டச் செலவு 14 கி.மீ.க்கு 4900 கோடி ரூபாயிலிருந்து 17 கிலோமீட்டருக்கு சுமார் 8600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது

ஹூக்லி

ஹூக்லி

இந்தநிலையில் நகரின் கிழக்கு மற்றும் மேற்குப் பதியை இணைக்கு வகையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வரும் 2022-ம் ஆண்டில் முடிவடையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நகரின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்காக கொல்கத்தா நகரின் அடையாளச் சின்னமாக அமைந்திருக்கும் ஹூக்லி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புமா ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்: கூகுள் பே, 2 நாள் பேட்டரி பேக் அப்- விலை தெரியுமா?புமா ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்: கூகுள் பே, 2 நாள் பேட்டரி பேக் அப்- விலை தெரியுமா?

 முதல் முறையாக அமையும் மெட்ரோ ரயில்

முதல் முறையாக அமையும் மெட்ரோ ரயில்

குறிப்பாக நாட்டிலேயே நீருக்கடியில் முதல் முறையாக அமையும் மெட்ரோ ரயில் சேவையாக இது அமையும், பின்பு இந்த திட்டத்திற்காக இந்திய ரயில்வே வாரியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20கோடி வழங்க உள்ளது என கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் மனஸ் சர்க்கார் தெரிவித்தார். மேலும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடமிருந்து 41கோடி ரூபாய் அளவுக்கு கடந்த அளித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

குறைவான நேரமே ஆகும்

குறைவான நேரமே ஆகும்

குறிப்பாக ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள இந்த புதிய பாதை மூலம் தினசரி சுமார் 900,000 மக்களை மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவார்கள் எனத் தகவல் தெரியவந்துள்ளது. பின்பு கொல்கத்தா நகரில் பாய்ந்து செல்லும் ஹுக்ளி ஆற்றில் 520மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் சுரங்கப்பாதை வாயிலாக அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் பாதையை கடக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.

Amazon ஸ்மார்ட் டிவி ஆஃப்பர்: சாம்சங், எல்ஜி, சியோமி டிவிக்கு ரூ.51901 வரை தள்ளுபடி!Amazon ஸ்மார்ட் டிவி ஆஃப்பர்: சாம்சங், எல்ஜி, சியோமி டிவிக்கு ரூ.51901 வரை தள்ளுபடி!

பயனுள்ள வகையில் அமையும்பயனுள்ள வகையில் அமையும்

தற்போது படகு மூலம் ஆற்றை கடக்க 20நிமிடங்கள் ஆகிறது. ஹவுரா பாலத்தை கடக்க ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகிறது. இந்த நிலையில் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் திட்டம்
நகர மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.

30 மீட்டர் ஆழத்தில்

30 மீட்டர் ஆழத்தில்

மேலும் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஹூக்ளி ஆற்றுக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
India's first underwater metro expected to be complete by March 2022 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X