Just In
- 7 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 8 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 8 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 9 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கோல்டு ATM-ஆ.! அப்படினா என்ன? காசிற்கு பதிலாக தங்கமா தருமா? என்னப்பா சொல்றீங்க.!
இந்தியா முழுக்க கிட்டத்தட்ட சுமார் 255 ஆயிரம் ATM மையங்களுக்கு மேல் பல இடங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் இது அதிகமாகத் தோன்றினாலும், இன்னும் ஏராளமான இடங்களில் பொது மக்களுக்கு ATM சேவையின் தேவை அதிகமாகவே உள்ளது.

இந்தியாவின் முதல் கோல்டு ஏடிஎம் அறிமுகம்.!
ATM என்றால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை, டெபிட் கார்டு மூலம் ரொக்கமாகப் பணத்தை வெளியில் எடுக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் கூட, இதுவரை நீங்கள் கேள்விப்படாத வகையில் இந்தியாவின் முதல் கோல்டு ஏடிஎம் (Gold ATM) இயந்திரம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் வழங்கும் ATM இயந்திரம்
இந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ATM இயந்திரம் இது என்று கூறுவதை விட, உலகின் முதல் நிகழ் நேரத் தங்கத்தை வழங்கும் முதல் ATM இயந்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ATM என்றால், ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இயந்திரமாகும்.

பொதுவான காசிற்கு பதிலாக தங்க காசுகளை வழங்குகிறதா?
இந்த இயந்திரம் பொதுவாகத் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரமாகத் தான் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பணம் ரொக்கமாக வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு நாம் பேசும் கோல்ட் ஏடிஎம் இயந்திரம் பணத்திற்குப் பதிலாகத் தங்க நாணயங்களை உங்களுக்கு வழங்குகிறது.

இந்தியாவில் இந்த கோல்டு ATM எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
ஆம், நீங்கள் உள்ளிடும் மதிப்பிற்கு ஏற்றார் போலத் தங்கக் காசுகளை உங்களுக்கு இந்த புதிய கோல்டு ATM இயந்திரம் வழங்குகிறது. இந்த புதிய ATM ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓபன்கியூப் (Opencube) டெக்னாலஜிஸ் தொழில்நுட்ப ஆதரவுடன், கோல்ட்சிக்கா (Goldsikka) தனது முதல் தங்க ஏடிஎம்களை பேகம்பேட்டில் தொடங்கியுள்ளது.

என்ன அளவில் தங்க காசுகள் இந்த ATM மூலம் வழங்கப்படும்?
இது இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், இது தான் உலகின் முதல் ரியல் டைம் கோல்ட் ஏடிஎம் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த ஏடிஎம் மூலம் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான பல்வேறு மதிப்புகளில் தங்க நாணயங்களை விநியோகிக்க முடியும் என்று கோல்ட்சிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி சை தாருஜ் கூறியுள்ளார்.

கோல்டு ATM இயந்திரம் எப்படிச் செயல்படும்?
அவரின் கருத்துப்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் (debit / credit card) பயன்படுத்தி வெவ்வேறு மதிப்புகளின் தங்க நாணயங்களை (gold coins) வித்ட்ரா செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த கோல்டு ATM இயந்திரம் எப்படிச் செயல்படும்? தங்கத்தின் தினசரி விலை டிஸ்பிளேவில் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

999 சான்றுதலுடன் டேம்பர் ப்ரூஃப் பேக்கில் தங்க காசுகள்
தங்க நாணயங்களுக்கான விலைகள் திரையில் நேரடியாகக் காட்டப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையானதாகவும் தெளிவாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாணயங்கள் 999 தூய்மையுடன் சான்றளிக்கப்பட்ட டேம்பர் ப்ரூஃப் பேக்குகளில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுக்க 3,000 கோல்டு ATM அறிமுகப்படுத்த திட்டமா?
ஹைதராபாத் விமான நிலையம், ஹைதராபாத் பழைய நகரம் ஆகிய இடங்களில் மூன்று இயந்திரங்களை அறிமுகப்படுத்தவும், கரீம்நகர் மற்றும் வாரங்கல்லிலும் இந்த கோல்டு ஏடிஎம் இயந்திரங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. வரும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இதுபோன்ற 3,000 ATM இயந்திரங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டு வருவதாக தாருஜ் கூறினார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470