இந்தியாவில் முதல் முறையாக லக்ஷமி..?

யார் இந்த லக்ஷமி, அப்படி என்னத்தை செய்துவிட்டார். வங்கித் துறையில் புதிய சாதனையாளர் பெயர் தான் லக்ஷமி. இவர் என்ன செய்தார் எனத் தெரிய வேண்டும்.

By Meganathan
|

மனிதர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்டறிந்து அவற்றைப் புரிந்து கொள்வது, கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் தருவது, அதிவேகமாகத் தரவுகளை இயக்குவது போன்றவற்றை இயக்கும் இந்தியாவின் முதல் பேங்கிங் ரோபோட் தான் லக்ஷமி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த ரோபோட் குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போமா..

வங்கி

வங்கி

கும்பகோணத்தைச் சேர்ந்த சிட்டி யுனியன் வங்கியில் தான் இந்தியாவின் முதல் ரோபோட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக உருவாக ஆறு மாத காலம் எடுத்துக் கொண்ட லக்ஷமியால் சுமார் 125க்கும் அதிகமான பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியும்.

பதில்

பதில்

'வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பதில் வழங்குவதில் அதிகக் கவனமுடன் செயல்படும் லக்ஷமி அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைத் தன்னிடம் பொருத்தப்பட்டிருக்கும் திரையில் டிஸ்ப்ளே செய்யும்' எனச் சிட்டி யுனியன் வங்கியின் சிஇஒ காமகோடி தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உரையாடல்

உரையாடல்

'வழக்கமான ரோபோக்களைப் போன்று இல்லாமல் தெளிவான ஆங்கிலத்தில் உரையாடல் போன்று லக்ஷமியின் பதில்கள் இருக்கும்,' 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்களின் கேள்விகளைத் தினசரி அடிப்படையில் நன்கு கற்றுக் கொள்ளும் - அதிகளவு கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது மிகவும் துல்லியமான விடைகளை வழங்கும்'என வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதில் இல்லை

பதில் இல்லை

'ஒருவேலை வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தெரியாத போது லக்ஷமி மெல்லிய குரலில் வங்கி மேலாளரை அணுகச் சொல்லும், காலப்போக்கில் பதில் தெரியாத கேள்விகளைத் தொகுத்து அவற்றையும் லக்ஷமிக்கு வழங்குவோம் - இதனால் சறப்பான சேவையை வழங்க முடியும்' என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்

தமிழ்

ஆங்கிலம் மட்டுமின்றி வாடிக்கையாளர்களைத் தமிழில் வரவேற்கச் செய்யவும், கண் பார்வையில் குறைபாடுள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவச் செய்ய வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காமகோடி தெரிவித்துள்ளார்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

தற்சமயம் ஒரே ரோபோட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் எனக் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சியும் வாடிக்கையாளர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் ரோபோட் வகைகளைச் சோதனை செய்து வருகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
India's first banking robot debuts in Chennai

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X