கத்தி பட பாணியில் கருத்து கணிப்பு- சராசரி இந்தியர் ஐபோன் 13 வாங்க 700 மணிநேரம் உழைக்கனும்: நம்ம 2-வது இடம்!

|

ஐபோன் 13 வாங்குவதற்கு எந்த நாட்டவர்கள் எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும் என்ற கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியர்கள் தான் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். முதல் இடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர். குறைந்த நாட்கள் உழைப்பில் ஐபோன் வாங்குவதற்கான நாடாக சுவிட்சர்லாந்து இருக்கிறது. அந்நாட்டு சராசரி குடிமகன் 34.3 மணிநேர உழைப்பில் இந்த சாதனம் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தலைமையகம் இருக்கும் அமெரிக்காவொ பொறுத்தவரையில் அந்நாட்டவர்கள் 49.5 மணிநேரம் உழைக்க வேண்டும்.

உச்சத்தில் இருக்கும் ஐபோன் 13

உச்சத்தில் இருக்கும் ஐபோன் 13

ஐபோன் 13 சாதனம் இந்தியாவில் தற்போது வாங்க கிடைக்கிறது. புதிய ஐபோன் சாதனத்தை வாங்கிய அதன் புது அம்சங்களை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். ஐபோன் விலை என்பது அனைவரும் அறிந்ததே, இதில் தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஐபோன் 13 விலை ஆனது உச்சத்தில் இருக்கிறது. இறக்குமதி வரிகள், வரிவிதிப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடுகிறது.

சராசரி வருமானம் குறித்து ஆய்வு

சராசரி வருமானம் குறித்து ஆய்வு

பல்வேறு நாடுகளில் சராசரி வருமானத்தை ஆய்வு செய்து பட்டியல் வெளியடப்பட்டுள்ளது. புதிதாக வெளியான ஐபோன் 13 வாங்குவதற்கு எந்தெந்த நாட்டவர்கள் எத்தனை நாட்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் பிலிப்பைன்ஸ் நாடும், இரண்டாவது இடத்தில் இந்தியர்களும் உள்ளனர்.

சராசரி நபர்கள் 724.2 மணி நேரம் உழைக்க வேண்டும்

சராசரி நபர்கள் 724.2 மணி நேரம் உழைக்க வேண்டும்

பட்டியலின்படி பிலிப்பைன்ஸ் நாட்டின் சராசரி நபர்கள் 775.3 மணிநேரங்கள் உழைக்க வேண்டும் எனவும் இந்தியாவின் சராசரி நபர்கள் 724.2 மணி நேரம் உழைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் சுவிட்சர்லாந்த் நாடு இருக்கிறது. இந்த நாட்டின் சராசரி நபர்கள் 34.3 மணிநேரம் உழைக்க வேண்டும் எனவும் கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தில் லக்ஸம்பெர்க் நாடு இருக்கிறது. இந்நாட்டின் சராசரி நபர்கள் 40 மணி நேரம் உழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரி இந்தியர்கள் உழைக்கும் நேரம்

சராசரி இந்தியர்கள் உழைக்கும் நேரம்

ஐபோன் தலைமையகம் இருக்கும் அமெரிக்கா கடைசியில் இருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சராசரி நபர்கள் 49.5 மணிநேரம் உழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 சாதனம் வாங்க சராசரி இந்தியர்கள் 724.2 மணிநேரம் உழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை பலரும் தங்கள் சமூகவலைதள கணக்கில் பகிர்ந்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ஐபோன் 13 சீரிஸ்: விலை

ஐபோன் 13 சீரிஸ்: விலை

ஐபோன் 13 சீரிஸ்-ன் மலிவான மாடல், ஐபோன் மினி 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.69,990 ஆகும். ஐபோன் 13 மினி 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 மற்றும் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.99,900 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 13 சாதனத்தின் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.79,900 ஆகவும் அதேபோல் 256 ஜிபி மாடல் விலை ரூ.89,900 ஆகவும் ஐபோன் 13 பிரிவில் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,09,900 ஆகவும் இருக்கிறது.

ஐபோன் 13 ப்ரோவின் விலை

ஐபோன் 13 ப்ரோவின் விலை

ஐபோன் 13 ப்ரோவின் விலை 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900 ஆகவும் 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,29,900 ஆகவும் இருக்கிறது. இந்த ஐபோன் மாடலின் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,49,900 ஆகவும் இருக்கிறது. அதேபோல் ப்ரோ மாடலின் உயர்நிலை மாறுபாடான 1டிபி உள்சேமிப்பு விலை ரூ.1,69,900 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,29,900 ஆகவும் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,39,900 ஆகவும் இருக்கிறது. 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,59,900 ஆகவும் 1டிபி வேரியண்ட் விலை ரூ.1,79,900 ஆகவும் இருக்கிறது.

ஐபோன் 13 சீரிஸ்: கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

ஐபோன் 13 சீரிஸ்: கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ப்ளூ, பிங்க், மிட்நைட், ரெட் மற்றும் ஸ்டார்லைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கின்றன. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் கோல்ட், கிராஃபைட், சியரா ப்ளூ மற்றும் சில்வர் ஹியூஸ் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி சாதனத்துக்கு விற்பனை சலுகை வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.6000 வரை தள்ளுபடி கிடைக்கும். எச்டிஎஃப்சி வங்கி கார்ட் மூலம் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.5000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India's average earners have to work 700 hours to buy an iPhone 13

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X