உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

|

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக நெதர்லாந்தைச் சேர்ந்த சர்ப்ஷார்க் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹேக்கிங் பதிவுகள் எவ்வளவு அதிகமாகப் பதிவாகியுள்ளது என்பதை இந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. சைபர் தாக்குதல் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் கிடைத்துள்ளது என்பதையும் இந்த நிறுவனத்தின் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்தியாவில் எத்தனை பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் எத்தனை பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?

நெதர்லாந்தைச் சேர்ந்த சர்ப்ஷார்க் நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, அதிக தரவு மீறல் சம்பவங்களில் இந்தியா உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளைத் தொகுக்க, முதல் டிஜிட்டல் தாக்குதல் பதிவு செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்த ஆய்வு நடப்பட்டுள்ளது. இந்தியாவில் சைபர் கிரைம் தாக்குதல்கள் மிகவும் அதிகமாக உள்ளது என்றும், ஒவ்வொரு 100 இந்தியர்களில் 18 பேர் தரவு மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை என்னென்ன தகவல்கள் எல்லாம் திருடப்பட்டுள்ளது?

இதுவரை என்னென்ன தகவல்கள் எல்லாம் திருடப்பட்டுள்ளது?

இந்த ஆய்வு இன்னும் பல நம்ப முடியாத பல திடுக்கிடும் உண்மை தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சைபர் கிரைம் தாக்குதல் மற்றும் டிஜிட்டல் விதி மீறல்களின் மூலம் தொலைப்பேசி எண்கள், தனிநபர் முகவரி, மின்னஞ்சல் ஐடி, பாஸ்வோர்ட் விபரங்கள் மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் என்று பல விதங்களில் சைபர் கிரைம் தாக்குதல்கள் இந்தியாவிற்குள் நடந்துள்ளது. நாட்டில் சைபர் கிரைம் அதிகரித்து வருவதால், ஹேக்கிங் முயற்சிகளிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது முக்கியமானதாகிவிட்டது.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

அடேங்கப்பா இவ்வளவு குற்றம் பதிவாகியுள்ளதா?

அடேங்கப்பா இவ்வளவு குற்றம் பதிவாகியுள்ளதா?

மொத்த தரவு மீறல் சம்பவங்களில் உலக அளவில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என்று சர்ப்ஷார்க் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. கடந்த 2004 முதல் 2022 இரண்டாம் காலாண்டிற்கு இடையில், மொத்தம் 14.9 பில்லியன் சைபர் கிராம் குற்றங்கள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஏன் அதிகமாக இருக்கிறது தெரியுமா? ஆன்லைனில் பதிவு செய்யும் போது, நம்மில் பெரும்பாலானோர் வெவ்வேறு கணக்குகளுக்கு ஒரே மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறோம்.

பல இடங்களில் ஒரே மின்னஞ்சல் பயன்படுத்துவது ஆபத்தானதா?

பல இடங்களில் ஒரே மின்னஞ்சல் பயன்படுத்துவது ஆபத்தானதா?

அதனால் தான், ஒரு மின்னஞ்சல் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல முறை நாம் வெவேறு வகையான சிக்கலில் சிக்கித் தவிக்கிறோம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வெளியான தரவுகளின்படி, இந்தியா இதுவரை 254,890,201 தரவு மீறல்களைச் சந்தித்துள்ளது. இந்த தரவு மீறல்களின் ஒட்டுமொத்த தாக்கம் 962,693,690 தரவு புள்ளிகள் ஆகும். அனைத்து தரவு மீறல் சம்பவங்களிலும் எத்தனை தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்பதைத் தரவு புள்ளிகள் குறிப்பிடுகின்றன.

பாஸ்வோர்ட் ஹாஷ் குற்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

பாஸ்வோர்ட் ஹாஷ் குற்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அவற்றுள், 139,452,180 சம்பவங்கள் பதிவாகியுள்ள கடவுச்சொல்லின் தரவுகளே அதிகம் கசிந்துள்ளன. ஹேக்கர்களால் திருடப்பட்ட மற்ற தகவல்களில் பாஸ்வோர்ட் ஹாஷ் எண்ணிக்கை 79,883,943 ஆகும். பெயர் திருட்டு எண்ணிக்கை 71,535,842 மற்றும் தொலைப்பேசி எண் திருட்டு எண்ணிக்கை 68,665,606 ஆகியவை ஆகும். மீறப்பட்ட மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 31.5% நபர் வசிக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் இந்தியா

2022 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் இந்தியா

அதாவது இந்த எண்களை எந்த நாட்டின் தரவுகளிலும் சேர்க்க முடியவில்லை மற்றும் தனிப்பட்ட நாடுகளுக்கான அந்தந்த எண்கள் அதைவிட அதிகமாக இருக்கலாம் என்பதை இது பரிந்துரைக்கிறது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் தரவுகளைப் பார்க்கும்போது, ​​இந்தியா 3.6 மில்லியன் சைபர் கிரைம் மீறல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 25 மில்லியனுக்கும் அதிகமான தரவு மீறல் சம்பவங்களைப் புகாரளித்த ரஷ்யா முதல் தரவரிசையை எடுத்துள்ளது.

மற்ற நாடுகளின் நிலை என்ன? ரேங்கிங் என்ன?

மற்ற நாடுகளின் நிலை என்ன? ரேங்கிங் என்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் காரணமாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. மொத்த வரலாற்றுத் தரவுகளை ஒப்பிடுகையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ரஷ்யா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை பட்டியலில் அடுத்துத் தொடர்ந்த இடங்களை பிடித்துள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் கட்டாயம் உங்களைக் கதிகலங்க வைத்திருக்கும் என்று நினைக்கிறோம், கவலையடையாதீர்கள், உங்களுக்கான உயர் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிசெய்யப் பின்வரும் டிப்ஸை பின்பற்றிப் பாதுகாப்பாக இருங்கள்.

உங்களை எப்படிப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வது? இதை செய்யுங்கள் போதும்

உங்களை எப்படிப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வது? இதை செய்யுங்கள் போதும்

  • உங்கள் பாஸ்வோர்ட் விபரத்தை எண்கள், எழுத்துக்கள் மற்றும் சிம்பல்களால் நிரப்புங்கள்.
  • முடிந்தவரை யாரும் கணிக்கமுடியாத சீரிஸை பாஸ்வோர்டாக கொண்டிருங்கள்.
  • பிறந்த தேதி, மொபைல் எண், பெயருடன் பிறந்த தேதி போன்ற சுலபமான பாஸ்வோர்ட்களை தவிர்த்துவிடுங்கள்.
  • 8 முதல் 12 எண்ணெழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை பாஸ்வோர்டாக பயன்படுத்துங்கள்.
  • உங்கள் பாஸ்வோர்ட் நீளமாக இருந்தால், உங்களுக்காகப் பாதுகாப்பு அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • OTP மற்றும் டூ-ஃபாக்டர்-ஆதென்டிகேஷன் கட்டாயம்

    OTP மற்றும் டூ-ஃபாக்டர்-ஆதென்டிகேஷன் கட்டாயம்

    • டூ-ஃபாக்டர்-ஆதென்டிகேஷன் அல்லது மல்டி-ஃபாக்டர்- ஆதென்டிகேஷன் அம்சங்களை ஆக்டிவேட் செய்யுங்கள்.
    • மொபைல் மூலம் OTP பெரும் பாதுகாப்பு அம்சங்களை ஆக்டிவேட் செய்யுங்கள்.
    • உங்கள் பாஸ்வோர்டை கைப்பழக்கம் எங்கும் எழுதி வைக்காதீர்கள்.
    • சமூக வலைத்தளம் அல்லது முன் பின் தெரியாத நபர்களிடம் உங்கள் பாஸ்வோர்ட் விபரங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
    • இந்த சிறிய விஷயங்களை எல்லாம் நீங்கள் கவனமாகக் கவனித்துக்கொண்டாள், சைபர் கிராம் அல்லது ஹேக்கிங் தாக்குதல்களிலிருந்து உங்களை முடிந்த வரை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
India Ranks Sixth In The World Total Data Breach Incident Try This Top Tips To Protect Yourself : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X