சைபர் க்ரைம்: உலக அளவில் 5வது இடத்தில் இந்தியா!

By Karthikeyan
|
சைபர் க்ரைம்: உலக அளவில் 5வது இடத்தில் இந்தியா!

சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படும் இணையதளத்தைப் பயன்படுத்தி இழைக்கப்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த சைபர் குற்றங்களில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

உலக அளவில் இணையதளங்கள் குற்றங்கள் தொடர்பாக, செக்யூரிட்டி மற்றும் டிபன்ஸ் அஜந்தா (எஸ்டிஎ) மற்றும் மெகாகாபீ ஆன்டி வைரஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன.

இணையதளம் பற்றிய பாதுகாப்பைக் கொண்டிருக்கும் த வெக்ஸ்டு கொஸ்டின் ஆப் க்ளோபல் ரூல்ஸ் இந்தியாவின் ஐடி பாதுகாப்பைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இணையதள பாதுகாப்பு குறைவாக இருப்பதாக அது கருதுகிறது. மேலும் மெட்ரோ மாநகரங்களுக்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் சட்டரீதியாக இணையதள குற்றங்களை அணுகுவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது என்ற அந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக சைபர் குற்றங்களைப் பற்றி இந்திய மிக விழிப்புடனே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இணைய தளத்தில் அடுத்தவரின் முகவரிகளைத் திருடுதல், முடக்குதல், பொருளாதார ரீதியிலான ஏமாற்று வேலைகள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்தல் மற்றும் கார்பரேட் குற்றங்கள் போன்ற குற்றங்களைத் தடுக்க தேசிய அளவில் நேஷனல் த்ரட் இன்டலிஜன்ஸ் சென்டர் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் தகவல் துறை மற்றும் ஐடி அமைச்சர் சச்சின் பைலட் கூறும் போது இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மட்டும் 133 அரசு இணையதளங்கள் இணையதள கடத்தல்காரர்களால் முடக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் இந்திய அரசு தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் இந்த குற்றங்களைத் தடுத்தால் நாட்டுக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நல்லது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X