அதுமட்டுமில்ல இதையும் இனி இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்: டிராய்

|

தொலைத்தொடர்பு உபகரணங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர் எஸ் ஷர்மா அறிவுறுத்தியுள்ளார்.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

106 செயலிகளுக்கு இந்திய அரசு தடை

106 செயலிகளுக்கு இந்திய அரசு தடை

இந்த நிலையில் டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 106 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இந்தியர்களின் தகவல்கள் சீனா வசம் சென்று கொண்டிருப்பதகாவும் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நேரிடும் எனவும் இந்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டது.

உலகத் தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்க வேண்டுகோள்

உலகத் தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்க வேண்டுகோள்

இதையடுத்து உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என இந்தியர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு என்ற சவாலில் பங்கேற்கும்படி இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆத்மனிர்பார் அறிமுகம்

ஆத்மனிர்பார் அறிமுகம்

ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கான வழிகாட்டுதல்கள், அவர்களின் திறமைகளுக்கான வழிகாட்டலைக் காணவும் இது நல்ல வாய்ப்பாகும். உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப சமூகத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும் எனவும் கூறப்பட்டது.

சீன உபகரணங்களை தவிர்க்க வேண்டும்

சீன உபகரணங்களை தவிர்க்க வேண்டும்

அதேபோல் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு விரிவாக்கத் தேவைக்கு சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என அரசு கேட்டதை அடுத்து, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4 ஜி தொலைதொடர்பு நெட்வொர்க் மேம்படுத்தலுக்கான பல கோடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

எக்காரணம் கொண்டும் இந்த எண்ணில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை!எக்காரணம் கொண்டும் இந்த எண்ணில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை!

உள்நாட்டில் உற்பத்தி செய்ய இறங்க வேண்டும்

உள்நாட்டில் உற்பத்தி செய்ய இறங்க வேண்டும்

மறுபுறம் சீனாவுடனான வர்த்தகத்தை குறைப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகளுக்கு சீனாவிடம் இருந்து வாங்கப்படும் உபகரணங்களுக்கு பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு களமிறங்க வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணைய தலைவர்

இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணைய தலைவர்

தொலைத்தொடர்பு உபகரணங்களை இந்திய நிறுவனங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மூலோபாய காரணங்களுக்காக இந்திய உள்நாட்டு தகவல் தொடர்பு சாதனங்களை துரிதப்படுத்த வேண்டும் என டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

நாடு கவனம் செலுத்த தொடக்கம்

நாடு கவனம் செலுத்த தொடக்கம்

மொபைல் தயாரிப்புகளின் உற்பத்தி சக்தியில் நாடு கவனம் செலுத்த தொடங்கிவிட்டாலும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கும் இது செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி

உள்நாட்டில் தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தி

நாட்டின் மூலோபாய நலனுக்காகவே, உள்நாட்டில் தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை துரிதப்படுத்துகிறோம் என டிராய் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது எனவும் நாட்டில் மொபைல் உற்பத்தியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.

சுற்றுச்சூழல் அமைப்பை  உருவாக்க முடியும்

சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும்

உள்நாட்டு தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரிப்பதற்கான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருப்பதாகவும், உலகளவில் முன்னணியாக இந்தியா மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
India Promoting Domestic Telecom Equipment Manufacturing: Trai Chairman Rs Sharma

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X