Home
News

அஞ்சல் துறையின் பேமண்ட்ஸ் பேங்க் அறிமுகம்:நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய 10 தகவல்கள்.!

அஞ்சல் பேமண்ட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1லட்சம் வரையிலான பணம் டெபாசிட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

இந்தியாவில் அஞ்சல் துறை வங்கித்துறையில் கால்பதிக்கும் வகையில் இந்தியா போஸட் பேமண்ட் (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி) என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவையை தொடங்கியுள்ளது, குறிப்பாக வங்கி சேவையை
கிராம மக்களிடமும் விரிவுபடுத்தும் நோக்கியில் இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் அஞ்சல் துறையின் பேமண்ட்ஸ் பேங்க் அறிமுகம்:10 தகவல்கள்.!

மேலும் இந்திய அஞ்சலக வங்கி தொடக்க விழாவில் சுமார் 50,000 கணக்குகள் தொடங்கப்பட்டன.ஐபிபிபி (I.P.P.B)வங்கிகளில் சேமிப்பு, தற்போதைய கணக்குகள்,பண பரிமாற்றம்,நேரடி சலுகைகள் பரிமாற்றம்,கட்டணம் செலுத்துதல் போன்ற பல சேவைகள் இதில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலக வங்கி சேவை திட்டத்தை ரிசர்வ் வங்கி நிர்வகிக்க உள்ளது.வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களில் இந்த "இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்" திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் துறையின் பேமண்ட்ஸ் பேங்க் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்களை பார்ப்போம்.

1.ரிசர்வ் வங்கி:

1.ரிசர்வ் வங்கி:

இந்த பேமண்ட் பேங்க் என்பது ரிசர்வ் வங்கி அனுமதியுடன் வங்கி சேவையாற்றும் நிதி நிறுவனம் ஆகும்.

2.கட்டணம்:

2.கட்டணம்:

மற்ற வங்கி சேவைகள் போன்றே அஞ்சல் பேமண்ட் பேங்கில் பண பரிவர்தனை செய்ய முடியும். கட்டணம் செலுத்த முடியும்.

3.1லட்சம்:

3.1லட்சம்:

அஞ்சல் பேமண்ட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1லட்சம் வரையிலான பணம் டெபாசிட் செய்ய முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.பேடிஎம், ஏர்டெல்

4.பேடிஎம், ஏர்டெல்

குறிப்பாக பேடிஎம், ஏர்டெல் பேமண்ட் வங்கிக்கு போட்டியாக அஞ்சலகத்தின் பேமண்ட் வங்கி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இறங்கி உள்ளது.

5.கிரெடிட் கார்டு

5.கிரெடிட் கார்டு

மேலும் அஞசல் பேமண்ட் வங்கியில் கடனோ, கிரெடிட் கார்டு கார்டோ பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.வட்டி:

6.வட்டி:

இந்த அஞ்சலக பேமண்ட் வங்கியில் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்கினால் 4சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

7.மத்திய அரசு

7.மத்திய அரசு

அஞ்சலக பேமண்ட் வங்கியானது மத்திய அரசால் நடத்தப்படும் வங்கி சேவை ஆகும்.

8.ஆதார்

8.ஆதார்

இந்த அஞ்சலக பேமண்ட் வங்கியில் மொபைல் ஆப் மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி அக்கவுண்ட் தொடங்க முடியும்.

9.போஸ்ட்மேன்:

9.போஸ்ட்மேன்:

அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை ஆனது கிராமம் தோறும் சேர்க்கும் விதமாக போஸ்ட்மேன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

10. எஸ்எம்எஸ், ஐவிஆர்

10. எஸ்எம்எஸ், ஐவிஆர்

உங்கள் அக்கவுண்டில் உள்ள பணத்தை அஞ்சலக கவுண்டரிலோ அல்லது ஏடிஎம் மூலமோ பெற முடியும். எஸ்எம்எஸ், ஐவிஆர் மூலம் பண வர்த்தனை செய்யும் வசதி உண்டு.

Best Mobiles in India

English summary
India Post Payments Bank launched 10 things to know: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X