உங்க போன், டேப்லெட், லேப்டாப் பழுது பார்க்க இனி "ரைட் டு ரிப்பேர்" சட்டம்! இனி யாரையும் ஏமாற்ற முடியாது!

|

Right to Repair: உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் டிவி போன்ற கேட்ஜெட்கள் அல்லது எலக்ட்ரானிக் சாதனங்கள் எல்லாம், முன்பை விட இப்போது மிகவும் வேகமாக பழுதடைந்துவிடுவதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? அப்படிப் பழுதடையும் போது அவற்றைப் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புதிதான ஒரு சாதனத்தை வாங்குவது சிறந்து என்பது போன்ற சூழ்நிலை எல்லாம் உருவாகியுள்ளதா? அப்போ இந்த ரைட் டு ரிப்பேர் (Right to Repair) சட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க.

தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எப்படி தந்திரமாக ஏமாற்றுகிறது?

தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எப்படி தந்திரமாக ஏமாற்றுகிறது?

கோளாறு ஏற்பட்ட டிவைஸை பழுதுபார்த்து அதை மீண்டும் பயன்படுத்துவதை விட, புதியதை வாங்க வேண்டிய கட்டாயம் இப்போது அதிகமாக ஏற்படுகிறது. இதற்குக் காரணம், நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருவதாலும், பழைய மாடலின் பாகங்களை நிறுத்திவிட்டதாலும் ஏற்படுகின்றன. உண்மையை சொல்ல போனால், நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றும் ஒரு ஏமாற்று வேலை தான் இது. இந்த ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க மத்திய அரசு ஒரு நடவடிக்கையை எடுக்கவுள்ளது.

'ரைட் டு ரிப்பேர் (Right to Repair) என்றால் என்ன?

'ரைட் டு ரிப்பேர் (Right to Repair) என்றால் என்ன?

மத்திய அரசு செயல்படும் திசையை, செயல்படுத்தினால், உற்பத்தி நிறுவனங்களின் இந்த ஏமாற்று வேலைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். இதை ஏமாற்று வேலையை நிறுத்த நம்மிடம் 'ரைட் டு ரிப்பேர் (Right to Repair) என்ற விதி இருக்கிறது. இதன் படி, நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்வதோடு, நுகர்வோருக்குச் சேதம் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதையும், வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்களை நீண்ட காலத்திற்கு வழங்க வேண்டும் என்பதையும் இந்த விதி பரிந்துரைக்கிறது.

இனி புதிய சாதனம் வாங்க கூறி கட்டாயப்படுத்த முடியாது

இனி புதிய சாதனம் வாங்க கூறி கட்டாயப்படுத்த முடியாது

இது தான் கஸ்டமர்களுக்கான 'பழுதுபார்க்கும் உரிமை' ஆகும். இப்போது எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை குறைத்துள்ளன. பழுதுபார்க்க முடியாத வகையில் தயாரிப்பைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த விதி ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால், மக்கள் இனி புதிய பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படமாட்டார்கள். மொபைல், லேப்டாப் போன்ற விஷயங்களில் குறைபாடு இருந்தால், இனி புதிய தயாரிப்புகளை வாங்குவதற்கு நிறுவனங்கள் நம்மை வற்புறுத்த முடியாது.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பழுதுபார்க்கும் உரிமை பற்றி என்ன கூறப்பட்டது?

ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பழுதுபார்க்கும் உரிமை பற்றி என்ன கூறப்பட்டது?

இது தொடர்பான மத்திய அரசு குழுவின் முதல் கூட்டம் ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, 'பழுதுபார்க்கும் உரிமை' என்ற இலக்குடன் விரிவான கட்டமைப்பை உருவாக்க, நுகர்வோர் விவகாரத் துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த ஏற்பாடு சரியாக நடந்தால், நுகர்வோரின் பெரும் பிரச்சினை ஒரு தீர்வுக்குக் கொண்டுவரப்படும். இதனுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த அமைப்பை உருவாக்கவும், புதிய மற்றும் பரந்த வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த புதிய சட்டம் எப்படி பொதுமக்களுக்கு பயனளிக்கப்பபோகிறது என்பதை பார்ப்போம்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த சிக்கல் இருக்காதா?

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த சிக்கல் இருக்காதா?

ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற அதன் முதல் கூட்டத்தில், இந்தக் குழுவானது விவசாய உபகரணங்கள், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோமொபைல் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் உட்படப் பல துறைகளில் இந்த 'பழுதுபார்க்கும் உரிமை' கொண்டு வரலாம் என்ற அறிவுரைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையின் நோக்கம் தெளிவாக உள்ளது. உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட 'பழைய பொருட்களை அகற்றும்' கலாச்சாரத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் விடுபட இது ஒரு நல்ல வாய்ப்பு.

கோளாறு ஏற்பட்டால் நிறுவனம் தான் சரி செய்ய வேண்டும்

கோளாறு ஏற்பட்டால் நிறுவனம் தான் சரி செய்ய வேண்டும்

இதன்படி, இனி ஒரு எலக்ட்ரானிக் தயாரிப்புக்கான உதிரிபாகம் அதன் வாழ்நாள் வரையில் சந்தையில் கிடைப்பதைத் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்படி வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தும் தயாரிப்புகளில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பழுதானாலோ, அவற்றை முற்றிலுமாக சரி செய்து தர வேண்டிய பொறுப்பு உற்பத்தியாளர்களுக்கு உள்ளது என்றும் மத்திய அரசின் குழு தெளிவாகக் கூறியுள்ளது. அதேபோல், வாடிக்கையாளர்கள் மீது நிறுவனம் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?

வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்கள் காட்டும் ஆதிக்கம் இதுதான்

வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்கள் காட்டும் ஆதிக்கம் இதுதான்

வாடிக்கையாளர் தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை அதன் உத்தரவாத காலம் இருக்கும்போது தனியாரிடம் கொடுத்து பழுது பார்க்கக் கூடாது என்ற விதி பல காலமாகத் தனியார் நிறுவனங்களால் மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே கொடுத்து பழுது பார்க்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை எல்லாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மீது திணித்து வருகிறது.. அப்படி மீறும் பட்சத்தில், அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது என்பன போன்ற விதிமுறைகளை நிறுவனங்கள் வகுத்துள்ளன.

ரைட் டு ரிப்பேர் விதி ஆதிக்கத்தை குறைக்குமா?

ரைட் டு ரிப்பேர் விதி ஆதிக்கத்தை குறைக்குமா?

இதனால், வாடிக்கையாளர்கள் மீது நிறுவனங்களின் பழுது நீக்கும் மையங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது அவசர நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்காது என்றும், வெளியூர்களில் நிறுவனத்திற்கான உரிய சர்வீஸ் சென்டரை வாடிக்கையாளர் தேடி அலைவதும் வீண் வேலையாக இருக்கிறது என்றும் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதனால், இது போன்ற ஆதிக்கம் காட்டும் விதிகளையும் நீக்குவது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. ரைட் டு ரிப்பேர் என்ற இந்த விதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

இந்த குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

இந்த குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதி காரே தலைமையில் 'பழுதுபார்க்கும் உரிமை' குறித்த குழு உள்ளது. இதில் நீதிபதி பரம்ஜித் சிங் தலிவால், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, பேராசிரியர் ஜி.எஸ்.பாஜ்பாய், பஞ்சாப் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவர், பேராசிரியர் அசோக் பாட்டீல், துணைவேந்தர், ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பாட்டியாலா மற்றும் ஐ.சி.இ.ஏ. , SIAM, நுகர்வோர் ஆர்வலர் மற்றும் நிறுவனங்களில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
India Plans To Implement New Right to Repair Rule For Gadgets And Electronic Devices

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X