ஸ்மார்ட்வாட்ச் மீது இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு.! ஆடிப்போன தயாரிப்பாளர்கள்.!

|

உங்கள் போனில் (Phone) என்ன சார்ஜ்ர் வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஹெட்போன்ஸ் (headphones), இயர்பட்ஸ் (earbuds) மற்றும் ஸ்மார்ட்வாட்சில் (smartwatch) என்ன சார்ஜ்ர் வழங்கப்பட்டுள்ளது? எப்போதாவது பிறரிடம் இருந்து சார்ஜ்ர் வாங்கி பயன்படுத்திய அனுபவம் இருக்கிறதா? அல்லது ஒரு குறிப்பிட்ட பின் டைப் சார்ஜரை (charger) கேட்டு பலரிடம் 'இல்லை' என்ற பதிலை மட்டும் சம்பாதித்த அனுபவம் இருக்கிறதா?

2000 அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்களுக்கு இந்த அனுபவம் கட்டாயமாக இருந்திருக்கும்.!

வெவ்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கு வெவ்வேறு விதமான சார்ஜர்கள்.!

வெவ்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கு வெவ்வேறு விதமான சார்ஜர்கள்.!

காரணம், 2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வெவ்வேறு ஸ்மார்ட்போன் (Smartphone) அல்லது மொபைல் போன் (Mobile Phone)மாடல்களுக்கு வெவ்வேறு விதமான சார்ஜிங் போர்ட்கள் (Charging ports) வழங்கப்பட்டன.

குறிப்பாக, ஒவ்வொரு விதமான தொலைபேசி பிராண்டுகளும் அவர்களுடைய மொபைல் போன் சந்தானத்திற்கு வெவ்வேறு விதமான சார்ஜர்களைக் கொண்டிருந்தன.

ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் உலகளாவிய சார்ஜிங் போர்ட் அவசியமா?

ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் உலகளாவிய சார்ஜிங் போர்ட் அவசியமா?

இதனால், மக்கள் ஒரு குறிப்பிட்ட சார்ஜ்ர் பின்னை (charger Pin) தேடி அலையவேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இருப்பினும், ஆண்ட்ராய்டு (Android) போன்களின் வருகைக்கு பிறகு இது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டில் மாற்றத்தை தொடங்கியது.

இப்போது, ​​​​இந்த மாற்றத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதால், ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் உலகளாவிய சார்ஜிங் தரநிலை தேவைப்படுவது போல் தெரிகிறது.

IRCTC-ல அக்கௌன்ட் இருக்கா.. அப்போ மாட்டிக்கிட்டீங்க.! மொத்தமா கோவிந்தா போட்ட ஹேக்கர்.!IRCTC-ல அக்கௌன்ட் இருக்கா.. அப்போ மாட்டிக்கிட்டீங்க.! மொத்தமா கோவிந்தா போட்ட ஹேக்கர்.!

ஆப்பிள் ஐபோன்களில் சார்ஜரை மாற்ற வலியுறுத்தி புது உத்தரவு.!

ஆப்பிள் ஐபோன்களில் சார்ஜரை மாற்ற வலியுறுத்தி புது உத்தரவு.!

ஆம், சமீபத்தில் வெளியான அறிவிப்புகள் படி - ஐரோப்பிய யூனியன் ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது லைட்டினிங் போர்ட்டை (lightning charger port) கைவிட்டு USB Type C போர்ட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டது.

தெரியாதவர்களுக்கு, யூ.எஸ்.பி டைப் சி என்பது பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு தரநிலையாக மாறியுள்ளது.

ஆனால், ஐபோன் தயாரிப்பாளர் மட்டுமே இந்த மாற்றத்திற்கு இன்று வரை மாறாமல் இருந்து வந்துள்ளனர்.

மக்கள் மத்தியில் வேகமாக வலுவடையும் புதிய சிக்கல்

மக்கள் மத்தியில் வேகமாக வலுவடையும் புதிய சிக்கல்

ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அதன் தனியுரிம சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் ஒட்டிக்கொள்ளத் தேர்ந்தெடுத்த ஒரே பெரிய பிராண்டாக திகழ்கிறது.

இது இப்போது மாற்றப்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் கட்டளைக்கு இணங்க ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மாடல்களில் USB Type C போர்ட்களை கொண்டுவருவதாக ஒப்புக்கொண்டது.

இருப்பினும், மக்களுக்கு மற்றொரு சிக்கல் இப்போது வலுவாக வலுவடையத் துவங்கியுள்ளது.

இனி புது TV வாங்க வேண்டாம்.! இப்படி செஞ்சா சாதாரண பழைய டிவி Smart TV ஆகிடும்.!இனி புது TV வாங்க வேண்டாம்.! இப்படி செஞ்சா சாதாரண பழைய டிவி Smart TV ஆகிடும்.!

இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு.!

இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு.!

உலகளவில் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் இப்போது அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் இப்போது வாங்க கிடைக்கும் வெவ்வேறு அணியக்கூடிய டிவைஸ்களில் வெவ்வேறு விதமான சார்ஜர்கள் (smartwatch charger) பயன்படுத்தப்படுகிறது.

ஒரே பிராண்டின் மாறுபட்ட மாடல்களுக்கு கூட இங்கு வித்தியாசமான மற்றும் பிரத்தியேக சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மீண்டும் மக்கள் சில துயரங்களை அனுபவிக்க வேண்டியதுள்ளது.

ஸ்மார்ட்வாட்சகளிலும் கூட சார்ஜரை மாற்ற இந்தியா முடிவு.!

ஸ்மார்ட்வாட்சகளிலும் கூட சார்ஜரை மாற்ற இந்தியா முடிவு.!

இதனால் இந்தியா ஸ்மார்ட்வாட்சகளிலும் கூட யூ.எஸ்.பி டைப் சி போர்ட்களை உலகளாவிய சார்ஜிங் தரநிலையாக மாற்றுவதற்கான புதிய ஆணையை அமல்படுத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், அணியக்கூடிய சாதனங்களுக்கும் இதேபோன்ற நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.

இருப்பினும், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் PTI சில விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.

Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் கலர்ஃபுல்லான வாட்ச்.!Redmi அறிமுகம் செய்த 2 புது ஸ்மார்ட்வாட்ச்.! கம்மி விலையில் கலர்ஃபுல்லான வாட்ச்.!

இதை எப்படி இந்தியா கண்காணிக்க முடிவு செய்துள்ளது?

இதை எப்படி இந்தியா கண்காணிக்க முடிவு செய்துள்ளது?

BIS ஆனது நிலையான சார்ஜிங் தீர்வுக்கான ஆதரவுடன் வரவிருக்கும் அனைத்து அணியக்கூடிய பொருட்களையும் சோதனை செய்து பின் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. உலகளாவிய சார்ஜிங் தீர்வுக்காகக் குறிப்பிடப்பட்ட நுகர்வோர் மின்னணு தயாரிப்புகளில் ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், வயர்லெஸ் இயர்பட்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் ஆகியவை அடங்கப்பட்டுள்ளது.

எந்த சார்ஜர் முறைக்கு எல்லா ஸ்மார்ட் சாதனங்களும் மாற்றப்படும்?

எந்த சார்ஜர் முறைக்கு எல்லா ஸ்மார்ட் சாதனங்களும் மாற்றப்படும்?

துரதிர்ஷ்டவசமாக, உண்மையான உலகளாவிய சார்ஜிங் தரநிலை எந்த வடிவத்தில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பெரும்பாலான நிறுவனங்கள் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்களில் டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளதால், இதையே ஸ்மார்ட்வாட்ச் பிராண்ட்களும் பின்தொடர வலியுறுத்தப்படுமா? அல்லது உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் சார்ஜராக ஏதேனும் ஒரு சார்ஜர் கொண்டுவரப்படுமா என்று யுகங்கள் கிளம்பியுள்ளது.

எது எப்படியாக இருந்தாலும் இறுதி முடிவு வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
India Plans To Change Universal Standard USB Type C Chargers For All Smartwatch and Earbuds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X