இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு அல்வா: மோடியின் செயலால் அதிர்ந்து போன பாகிஸ்தான்.!

|

எஸ்-400 ஏவுகணை இந்தியா ரஷ்யாவிடம் வாங்கினால், பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலாக எங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட எப்-21 ரக போர் விமானங்களையும், உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை பாதுகாப்புகளையும் வாங்கி கொள்ளலாம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தது.

எஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.!

இதை மீறி இந்தியா வாங்கினால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது. இந்த விஷயத்தில் ரஷ்யாவுக்கு எஸ்-400 ஏவுகணைக்காக இந்தியா முன்பணம் கொடுத்து அமெரிக்காவுக்கு அல்வா கொடுத்துள்ளது

மற்றொரு புறத்தில் இந்தியா செய்த இந்த செயலால் பாகிஸ்தான் அலறி வருகின்றது.

 எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?

எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?

ரஷ்யாவிடம் இந்தியா ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் (5.43 பில்லியன் டாலர்) 5 ஏவுகணைகளை வாங்க முன் வந்துள்ளது. எஸ் 400 டிரையம்ப் வகையை சேர்ந்த ஏவுகணைகள் நடமாடும் ஊர்த்தியிலிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையோ தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. போர் காலங்களில் நாட்டில் உள்ள முதன்மையாக நகரங்களையும் அணு ஆயுதங் அமைப்புகளையும் எதிரிகளின் போர் விமானங்களும் ஏவுகணைகளும் தாக்காமல் காக்க முடியும்.

எஸ்-400 ஏவுகணை செயல்படும் விதம்

இந்தியாவின் வான் எல்லைக்குள் அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் இந்த ஏவுகணைகள் நுழையாமல் தடுக்கும். அப்படியே நுழைந்தாலும், 380 கிலோ மீட்டருக்கு முன்பே இது எச்சரிக்கை செய்து அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை தாக்கி அழித்து விடும். எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்திய சாதனமே எஸ்-400 ஆகும். இதை ரஷ்யாவை சேர்ந்த அல்மாஸ்-ஆன்டே நிறுவனம் 2007ம் ஆண்டு தயாரித்துள்ளது.

இந்தியா வாங்கும் காரணம்

இந்தியா வாங்கும் காரணம்

இந்தியாவை ஒட்டி இருக்கும் பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன. அத்துமீறும் சீனா- பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதங்களையும் முறியடிக்கவே இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதாக இந்திய விமானப்படை தலைவர் பிஎஸ் தானோ தெரிவித்து இருக்கின்றார்.

பொருளாதார தடைக்கு இதுதான் காரணம்

பொருளாதார தடைக்கு இதுதான் காரணம்

அமெரிக்காவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின்படி ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போர் ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. பொருளாதார தடை உத்தரவை நீக்கும் அதிகாரம் டிரம்புக்கு மட்டும் இருக்கின்றது. இந்தியா பாதுகாப்புக்காகதான் வாங்குகின்றது என்றும் அமெரிக்காவிடம் விளக்கம் கூறியுள்ளது.

நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.!நிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.!

114 போர் விமானம் வாங்க முனைப்பு:

114 போர் விமானம் வாங்க முனைப்பு:

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன.

போட்டி போடும் நிறுவனங்கள்:

போட்டி போடும் நிறுவனங்கள்:

இந்த போட்டியில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப் 21 விமானங்கள், போயிங் நிறுவனத்தின் F/A-18 விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர் டைப்யூன், ரஷியாவின் மிக் 35 மற்றும் சுவீடனின் சாப் 35 கிரிப்பன் விமானங்கள் முன்னணியில் உள்ளன.

புதிய போர் விமானம் வடிவமைப்பு:

புதிய போர் விமானம் வடிவமைப்பு:

இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் கூறுகையில், இந்தியாவின் சூழலுக்கு ஏற்ப செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

 மற்ற நாடுகளுக்கு விற்கமாட்டோம்:

மற்ற நாடுகளுக்கு விற்கமாட்டோம்:

இந்த விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிப்பதால், விலையும் குறைவாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

9.ரேடாருக்கு சிக்காமல் செல்லும்: ஒற்றை விமானி மட்டுமே பயணிக்கும் எப் -21 ரக விமானம், எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. சின்ன ஓடுதளத்தில் கூட இறங்கி,ஏறும் திறன் கொண்டது என்பதால், விமானந்தாங்கி கப்பல்களில் செயல்பட ஏற்றது.

ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

ரேடாருக்கு சிக்காமல் செல்லும்:

ரேடாருக்கு சிக்காமல் செல்லும்:

ஒற்றை விமானி மட்டுமே பயணிக்கும் எப் -21 ரக விமானம், எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. சின்ன ஓடுதளத்தில் கூட இறங்கி,ஏறும் திறன் கொண்டது என்பதால், விமானந்தாங்கி கப்பல்களில் செயல்பட ஏற்றது.

துல்லியமாக தாக்கும்:

துல்லியமாக தாக்கும்:

குறைந்த பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம், தாக்கும் இலக்கை துல்லியமாக கணித்து காட்டும் வசதி, விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பை விரைந்து உருவாக்கி, தொடர்ந்து காக்கும் திறன், தானியங்கி கருவி மூலம் இயங்குவதால் குறைந்த மனித ஆற்றல் மட்டுமே தேவை என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது இந்த விமானம்.

செப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்? ஆர்பிஐ விதிமுறை.!செப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்? ஆர்பிஐ விதிமுறை.!

தாக்கும் திறன்:

தாக்கும் திறன்:

ஒரே நேரத்தில் 910 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், 450 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளை தாங்கிச் சென்று வீசுவதோடு, விமானங்களை வீழ்த்தும் நான்கு ஏவுகணைகளையும் வீசும் வல்லமை எப்-21 ரக விமானங்களுக்கு உண்டு.

ரஷ்யாவுக்கு முன்பணம்:

ரஷ்யாவுக்கு முன்பணம்:

இந்நிலையில், அமெர்காவின் உத்தரவையும் மீறி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 27 ம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மாஸ்கோவில் சந்தித்து, எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா சார்பில் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025க்குள் ஏவுகணைகள்:

2025க்குள் ஏவுகணைகள்:

பாதுகாப்பு காரணங்கள் கருத்தி, தொழில்நுட்பங்களை வெளியிட முடியாது என்று ரஷ்யாவின் ராணுவ கூட்டாட்சி அமைச்சம் தெரிவித்துள்ளது. மேலும், 2020 இல் இருந்து 2025-க்குள் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு துறை இணை இயக்குனர் விலாடிமிர் ட்ராக்லாவ் கூறினார்.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!

 அமெரிக்காவுக்கு அல்வா:

அமெரிக்காவுக்கு அல்வா:

இந்நிலையில் அமெரிக்காவின் உத்தரவையும் மீறி இந்தியா தரப்பில் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. மேலும், இந்தியா-சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாக்கவே எஸ்-400 ஏவுகணை வாங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மற்றொரு புறத்தில் இந்தியா செய்த இந்த செயலால் பாகிஸ்தான் அலறி வருகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
india paid advance for Russia to buy S 4oo missile : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X