2016 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

By Meganathan
|

ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்த வரை 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடம் பிடிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

[ஆன்டிராய்டு1.0 முதல் லாலிபாப் பயனம், ஒரு பார்வை]

இந்தியாவில் 200 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகளை பெறும் என்றும் 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

இந்தாண்டின் இறுதியில் சீனாவில் 519.7 மில்லியன் பயனாளிகளும், அமெரிக்காவில் 165.3 மில்லியன் பயனாளிகளும், இந்தியாவில் சுமார் 123.3 மில்லியன் பயனாளிகளும், ஜப்பானில் 50.8 மில்லியன் மற்றும் ரஷ்யாவில் 49 மில்லியன் பயனாளிகளின் எண்னிக்கை இருக்கும்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல், சிறந்த சலுகைகளுடன் ஐபோன் 6 வாங்க வேண்டுமா?

2015 ஆம் ஆண்டில் ரஷ்யா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி நான்காம் இடத்தை பிடிக்கும் என்றும் 2017 ஆம் ஆண்டில் அமெரிக்கா 200 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகள கொண்டிருக்கும். இது அமெரிக்காவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் ஆகும்.

2016 ஆம் ஆண்டிலும் சீனா 642.7 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும், அடுத்த இடத்தை இந்தியா 204.1 மில்லியன், அமெரிக்கா 198.5 மில்லியன், ரஷ்யா 65.1 மில்லியன் மற்றும் ஜப்பான் 61.2 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

2015 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 1.91 பில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இருப்பர், மேலும் 2016 ஆம் ஆண்டில் இந்த எண்னிக்கை 12.6 சதவீதம் அதிகரித்து 2.16 பில்லியனாக உயரும்.

2013 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்னிக்கை முதல் முறையாக 1.31 பில்லியானை எட்டியது, இதில் சீனா 436.1 மில்லியன், அமெரிக்கா 143.9 மில்லியனும், இந்தியா 76 மில்லியன், ஜப்பான் 40.5 மில்லியனும் ரஷ்யா 35.8 மில்லியனாகவும் இறுந்தது.

Best Mobiles in India

English summary
India to overtake US in smartphones by 2016. India will overtake the US as the second largest market for smartphones in the world by 2016 .

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X