அமெரிக்காவை பின் தள்ளியது இந்தியா..!!

By Meganathan
|

நாட்டுல எவ்வளவோ பிர்ச்சனை, இருக்க தான் செய்யுது, இருந்தாலும் மக்கள் கவனம் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே இருக்கின்றது எனலாம். உலகெங்கும் பல பிரச்சனைகள் இருக்கும் போது பெரும்பாலானோரின் கவனம் எதில் இருக்கின்றது என்ற உண்மை வெளிவந்திருக்கின்றது.

உலகில் ஒவ்வொரு நாடும் பல்வேறு விஷயங்களை குறிவைத்து அதில் வளர்ச்சி அடையும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கின்றது எனலாம். அந்த வகையில் இந்தியாவின் இந்த வளர்ச்சியை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியிருப்பதோடு உற்று நோக்கவும் செய்திருக்கின்றது..

இண்டர்நெட்

இண்டர்நெட்

உலகம் முழுக்க இண்டர்நெட் பயன்படுத்துவோர் குறித்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது.

நிறுவனம்

நிறுவனம்

இந்த அறிக்கை ஐஏஎம்ஏஐ ஆய்வு நிறுவனத்தின் தரப்பில் வெளியாகி இருக்கின்றது.

உயர்வு

உயர்வு

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை டிசம்பர் மாத வாக்கில் சுமார் 402 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது கடந்த ஆண்டை விட 49% சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருவி

கருவி

இதில் சுமார் 306 மில்லியன் பயனாளிகள் தங்களது மொபைல் போன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அளவு அக்டோபர் மாதத்தில் 276 மில்லியனாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உயர்வு

உயர்வு

இந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை 10 மில்லியனில் இருந்து 100 மில்லியனாக அதிகரிக்க பத்து ஆண்டுகள் ஆனது, 100இல் இருந்து 200 மில்லியனாக அதிகரிக்க மூன்று ஆண்டுகளும் 300 இல் இருந்து 400 மில்லியனாக அதிகரிக்க ஒரு ஆண்டு மட்டுமே ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம்

அதிகம்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 462 மில்லியன் பயனாளிகள் மொபைல் மூலம் ஆன்லைன் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலவரம்

நிலவரம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் இண்டர்நெட் பயனாளிகள் 300 மில்லியனாக இருந்தது, இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 375 மில்லியனாக உயர்ந்திருக்கின்றது.

இடம்

இடம்

தற்சமயம் அதிக இண்டர்நெட் பயனாளிகளை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

முன்னிலை

முன்னிலை

இதே எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் மேலும் அதிகரித்து இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலிடம்

முதலிடம்

உலகளவில் அதிக இண்டர்நெட் பயனாளிகளை கொண்டிருப்பதில் சீனா முதலிடம் பிடித்திருக்கின்றது. சீனாவில் தற்சமயம் சுமார் 650 மில்லியன் பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்சமயம் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் இந்தியா வரும் ஆண்டுகளில் உலகளவில் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
India to overcome US among highest Internet users worldwide. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X