கொடூர கொலை வெறியாட்டத்திற்கு வாட்ஸ்ஆப்பை குற்றம் சொல்ல முடியுமா?

நவீன மெசேஜிங் செயலிகள் எப்படி செயல்படுகின்றன என்ற புரிதல் இல்லாமல் அமைச்சகம் இருப்பதை அதன் தவறான அணுகுமுறைகள் அம்பலப்படுத்தியுள்ளது.

|

கடந்த மே மாதத்திலிருந்து மட்டும் இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் 29 பேர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பி பல்வேறு கும்பல்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொடூர கொலை வெறியாட்டத்திற்கு வாட்ஸ்ஆப்பை குற்றம் சொல்ல முடியுமா?

மிக சமீபத்தில் கடந்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்தில், 5 விவசாய பணியாளர்களை 40 பேர் கொண்ட ஒரு கும்பல் 3000 மக்கள் முன்னிலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். கடந்த வாரம் நடந்த இதே போன்ற ஒரு சம்பவத்தில் தாக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து திரிபுரா அரசு அனைத்து நகரங்களிலும் இந்த வதந்திகளை ஒழிப்பதற்காக ஒலிப்பெருக்கிகள் வாயிலாக எச்சரிக்கை அறிவிப்புகளை செய்துவருகிறது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

இந்த சோகத்திலும், சற்றும் ஆச்சரியமளிக்காத வகையில், இந்தியா அரசு இது போன்ற வன்முறைகளை ஒடுக்குவதற்கான வழிகளை ஆராயாமல், வாட்ஸ்ஆப்-ஐ பலிகடா ஆக்க பார்க்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மெசெஜ் சேவை வழங்கும் நிறுவனங்களை " உடனடியாக வதந்திகளை பரப்பும் மெசேஜ்களை தகுந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தடுக்க வேண்டும் '" என கேட்டுக்கொண்டுள்ளது.

நவீன மெசேஜிங் செயலிகள்

நவீன மெசேஜிங் செயலிகள்

நவீன மெசேஜிங் செயலிகள் எப்படி செயல்படுகின்றன என்ற புரிதல் இல்லாமல் அமைச்சகம் இருப்பதை அதன் தவறான அணுகுமுறைகள் அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டில் நடக்கும் இது போன்ற கொடூர கொலைகளுக்கு காரணமான முக்கிய மற்றும் மிகப்பெரிய பிரச்சனைகளை சரியான விதத்தில் அணுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற வைரல் மெசேஜ்களுக்கு மக்கள் இரையாக அப்பாவிகளை கும்பலாக தாக்கி கொலை செய்வது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

சர்வதேச செய்தி

சர்வதேச செய்தி

இதுபற்றி சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய கள ஆய்வில், எப்படி பாகிஸ்தானின் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விளம்பரம் எடிட் செய்யப்பட்டு, நாடு முழுவதும் தவறான தகவலை பரப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

ட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன

ட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரும், கடந்த சில வாரங்களாக இந்த வதந்திகளை பரவுவதை தடுக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அது அவ்வளவு பலனளிக்கவில்லை என்றே சமீபத்திய சம்பவங்கள் குறிக்கின்றன.


இது போன்ற வதந்திகள் பொதுமக்களிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதால், நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அந்த மெசேஜ்களுங்கு பின்னால் உள்ள உண்மையை புரிந்துகொள்ளாமலும், இதுபோன்ற சம்பவங்களில் கலந்துகொள்வதன் பின்விளைவுகளை அறிந்துகொள்ளலாமல் பொதுமக்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

 200 மில்லியன்

200 மில்லியன்

வதந்திகள் பரவுவதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. உலகிலேயே இந்தியாவில் தான் 200 மில்லியன் பயனர்கள் என்ற மிகப்பெரிய தளத்தை வாட்ஸ்ஆப் வைத்துள்ளது. 2020க்குள் 500 மில்லியன் பயனர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் வசதி பெறுவர் என கூகுள் நம்புகிறது. அதுமட்டுமின்றி உலகிலேயே இந்தியாவில் தான் மொபைல் டேட்டா எனும் இணைய கட்டணமும் குறைவாக உள்ளது .


வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது மெசேஜிங் சேவையில் முழு மறையாக்க வசதி(End to End Encryption) வழங்குவதால், பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை அந்நிறுவனத்தால் கூடபடிக்க முடியாது. நிலைமை இப்படியிருக்க, காவல்துறை இந்த மெசேஜ்களை கண்காணிப்பது என்பது இந்த சேவையின் சில அம்சங்களை நீக்காமல் சாத்தியமே இல்லை.

இந்திய அரசாங்கம்

இந்திய அரசாங்கம்

வாட்ஸ்ஆப்பை குறை சொல்லாமல்,மக்களை பதற்றமடையச் செய்து வன்முறைக்கு வழிவகுக்கும் வதந்திகள் போன்ற பெரும் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி என்று இந்திய அரசாங்கம் சிந்திக்க வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல இந்த பிரச்சனைகளை வாட்ஸ்ஆப்பை வைத்து தீர்க்கலாம்.

தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி, 2018கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய கடந்த ஆண்டு மட்டும் 5000 வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதில் 61மில்லியன் பேரை இணைத்தது.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

நடவடிக்கை எடுக்கவேண்டும்

இதுபோல இந்த வதந்திகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம். கூடுதலாக, காவல்துறையும் தங்கள் பங்குக்கு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் பகுதிகளுக்கு விரைந்து சென்று தக்க நடவடிக்கை எடுக்கலாம்.

தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையான வழிகளில், தொழில்நுட்ப நிறுவனங்களும் பொதுமக்களும் ஒன்றாக ஒத்துழைத்து சமாளிக்க வேண்டும். தற்போது அரசாங்கமும் இந்த வதந்திகளை தடுக்க ஒரு வழியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Best Mobiles in India

English summary
India must blame itself, not WhatsApp, for its devastating lynching spree: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X