BharatCaller ஆப் அறிமுகம்.! இனி TrueCaller-க்கு வேலை இருக்காது போலயே.!
ட்ரூ காலர் ஆப் வசதியை அதிக மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக பாரத் காலர் ஐடி எனும் புதிய ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பாரத் காலர் ஆப் வசதியும் முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை கண்டறிய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அந்த ட்ரூகாலர் ஆப் போலவே தான் இந்த பாரத் காலர் ஆப் வசதியும் வேலை செய்யும். ஆனால்
இந்த பாரத் காலர் ஆப் வசதியானது மேட் இன் இந்தியா என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதுஇந்த பாரத் காலர் ஆப்.

கூகுள் பிளே ஸடோரில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி இந்த பாரத் காலர் ஐடி ஆப் வசதியானது 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர் தரவுத்தளத்தையும், உலக சமூகத்திலிருந்து 1 பில்லியனுக்கும் அதிகமான எண்களின் தரவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய செயலி நமது தகவல்தொடர்புகளை பாதுகாப்பாக கையாள உதவும் ஒரு ஆப் வசதியாகும்.

குறிப்பாக இந்த பாரத் காலர் ஐடி ஆப் சரியான பாதுகாப்பை உறுதி செய்கிறது. பின்பு வாடிக்கையாளர்களின் போன் காண்டாக்ட் புக்கை பதிவேற்றாது என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஆப் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தையும் (லோக்கேஷன்) கண்காணிக்காது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாரத் காலர் ஐடி ஆப் வசதியை ஆண்ட்ராய்டு 6.0 வெர்ஷன் மற்றும் அதற்கு மேலான ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஆப் மூலம் உண்மையான அழைப்பாளர் விவரங்களை பெறமுடியும். அத்துடன் குறிப்பிட்ட சில அழைப்புகளுக்கு பதிலளிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க பாரத் காலர் ஐடி ஆப் எளிமையாக உதவுகிறது.

அதேபோல் இந்த புதிய ஆப் வசதியில் Phone Number Search எனும் அம்சமும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணையும் தேடலாம். மேலும் முன்பின் தெரியாத எண்களில் யார் அழைத்தார்கள் என்பதையும் இந்த அம்சம் மூலம் பார்க்கமுடியும்.

பாரத் காலர் ஐடி ஆப் வசதியை பொறுத்தவரை இணைய அணுகல் இல்லாமலேயே அறியப்படாத அழைப்புகள் மற்றும் மேசேஜ்களை அடையாள காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, சவுதி அரேபியா, எகிப்து, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஆப் வசதிக்கான ஆஃப்லைன் தரவுத்தளம் அணுக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications