இஸ்ரோ ரெடி..! உலக நாடுகள் 'வாய் பிளக்க' ரெடியா.??

|

ஒருவரின் வளர்ச்சியானதை யாராலும் தடுக்கவே முடியாது அதிலும் நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் வளர்ச்சியை - பல காலமாக, பல உலக நாடுகளின் விண்வெளி மையங்களால் - அசைக்ககூட முடியவில்லை என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளாய் உலக நாட்டு செயற்கை கோள்களை விண்ணியல் செலுத்துவதில் மைல்கல், உள்நாட்டு உற்பத்தியில் மாபெரும் வளர்ச்சி, ஆதித்யா எல்1, சந்திராயன் - 2, மார்ஸ் மிஷன் என அடுக்கி கொண்டே போக முடியும்..!

அந்த வரிசையில் இஸ்ரோவின் அடுத்த 'ப்ராஜக்ட்டை' கண்டும் உலக நாடுகள் வாய்பிளக்க போகின்றன, அதுவும் மிக விரைவில்..!

ரீயுசபில் ராக்கெட்கள் :

ரீயுசபில் ராக்கெட்கள் :

விண்வெளி பயணம் மற்றும் ஆராய்ச்சிகளின் எதிர்காலமாய் மறுமுறை பயன்படுத்தக்கூடிய ரீயுசபில் ராக்கெட்கள் (Reusable rockets) கருதப்படுகின்றன.

வெற்றி :

வெற்றி :

பல கடுமையான முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப மற்றும் விண்வெளி உற்பத்தியாளர், விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (Space X) கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக ரீயுசபில் ராக்கெட்டை கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் இறக்கியத்தில் இருந்து உலக விண்வெளிமையத்தின் மொத்த கவனமும் ரீயுசபில் ராக்கெட் மீது திரும்பியுள்ளது.

டிசம்பர் 28, 2015 :

டிசம்பர் 28, 2015 :

மறுபக்கம் வெளிப்படையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, டிசம்பர் 28, 2015 அன்றே தனது முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை பயன்படுத்த, விண்ணில் செலுத்தி பரிசோதிக்க திட்டமிட்டு இருந்தது.

தொழில்நுட்ப சிக்கல் :

தொழில்நுட்ப சிக்கல் :

ஆனால், சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ரீயுசபில் ராக்கெட் பரிசோதனையானது பிப்ரவரி 2016 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது, பின்பு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

ரீயுசபில் லான்ச் வெயிக்கல்-டெக்னாலஜி :

ரீயுசபில் லான்ச் வெயிக்கல்-டெக்னாலஜி :

பூமி கிரகத்தின் குறைந்த அளவிலான சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டு, பின்பு மீண்டும் பூமியின் நிலப்பகுதிக்கே திரும்பி வரக்கூடிய தொழில்நுட்பத்தை தான் ரீயுசபில் லான்ச் வெயிக்கல்-டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேடர் (Reusable Launch Vehicle-Technology Demonstrator - RLV-TD) எனப்படுகிறது.

சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் :

சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் :

கேரளாவின் தும்பாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தான் (Vikram Sarabhai Space Centre - VSSC) இவ்வகையான ரீயுசபில் லான்ச் வெயிக்கல்தனை உருவாக்குவது.

குறைந்தபட்ச செலவு :

குறைந்தபட்ச செலவு :

வழக்கம்போல் சாத்தியமான குறைந்தபட்ச செலவில், அதாவது வழக்கமாக ஏற்படக்கூடிய செலவை விட 10 மடங்கு குறைந்த செலவில் இந்த திட்டத்தையும் இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தும் என்று நம்பப்டுகிறது.

வங்காள விரிகுடா :

வங்காள விரிகுடா :

சுமார் 70 கிலோமீட்டர் விண்ணில் செலுத்தப்பட்டு பின்பு மென்மையான முறையில் வங்காள விரிகுடாவில் இறக்கும் படியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மீட்பு :

மீட்பு :

கடலில் இறக்கப்பட்டு கடலின் ஆழத்திற்கு மூழ்கடிக்கப்பட இருக்கும் ராக்கெட்தனை மீட்க இதுவரையிலாக எந்த விதமான திட்டமும் இல்லை என்கிற போதிலும், அதற்காக பணி நடந்து கொண்டே இருக்கிறது.

 2025 :

2025 :

இந்த திட்டமானது 2016 ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் நடத்தப்பட இருக்கிறது என்பதும், அதனை தொடர்ந்து பல பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு வாக்கில் ரீயுசபில் ராக்கெட்கள் செயல்முறைபடுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சூரியனில் கதவு : அதிர்ச்சியூட்டும் ஆய்வாளர்கள்.!!


இனி சியாச்சினில் ஒரு உயிர் கூட பலியாகாது : களத்தில் குதிக்கும் இஸ்ரோ..!

இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India to launch its reusable spaceplane in May. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X