இதை செய்த 4-வது நாடு இந்தியா தான்: டெல்லி மெட்ரோவில் அறிமுகம்- என்ன தெரியுமா?

|

தலைநகர் டெல்லியில் விமான நிலைய எகஸ்பிரஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 22 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையில் மெட்ரோ ரயில் பயணம் 24 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த தடத்தில் 6 ரயில் நிலையங்கள் இருக்கிறது. இந்த தடத்தில் தினமும் 60 பயணிகள் இந்த பாதையில் பயணம் செய்கிறார்கள்.

இலவச வைபை வசதி

இலவச வைபை வசதி

இந்த மெட்ரோ ரயிலானது மேற்புறத்திலும், பூமிக்கு அடியிலும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் தலைவர் மங்கு சிங், நேற்று டெல்லி மெட்ரோ ரயிலில் இலவச வைபை வசதியை தொடங்கி வைத்தார். ஓடும் ரயிலில் இலவச வைபை வசதியை மெட்ரோ ரயில் தலைவர் தொடங்கிவைத்தார்.

 பயணம் நேரம் வீணாகாத வகையில் வைபை

பயணம் நேரம் வீணாகாத வகையில் வைபை

மெட்ரோ ரயில் செல்லும் பயணிகள் இணையத்தை எளிதாக கையாளும் முறையில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் இணையத்தில் படிக்கும் வகையிலும், பிற பயணிகள் ஆன்லைனில் செய்திகள் மற்றும் நாட்டு நடப்புகளை படிக்கும் வகையிலும் இந்த வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. பயணத்தின்போது நேரம் வீணாக செலவாகும் விதமாக இந்த முறை செயல்படுத்தப்படுகிறது.

ரஷ்யா, தென்கொரியா, சீனா அடுத்து இந்தியா

ரஷ்யா, தென்கொரியா, சீனா அடுத்து இந்தியா

மெட்ரோ ரயில் வசதியென்பது ரஷ்யா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையானது தெற்கு ஆசியா நாடுகளிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பயணர்களுக்கு பெரிதளவு உதவியாக இருக்கும்

பயணர்களுக்கு பெரிதளவு உதவியாக இருக்கும்

இதை தொடர்ந்து படிப்படியாக மற்ற டெல்லி மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் இந்த வைபை வசதியானது பயணர்களுக்கு பெரிதளவு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pic Courtesy: Social media

Best Mobiles in India

English summary
India is the fourth country who did this: launches in delhi metro

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X