ஒப்புதல் கிடைத்ததும் : சீறிப்பாய போகும் இந்தியா..!

|

பொதுவாக ஒரு நாட்டு ராணுவத்திற்குள் நடக்கும் விடயங்களும், திட்டங்களும், செயல் நோக்கங்களும் பாதுகாப்பு காரணங்கள் கருதி வெளியிடப்படுவது இல்லை. இருப்பினும், சில சமயங்களில் 'சில' ராணுவ வளர்ச்சி சார்ந்த விடயங்களை வெளியிடுவதிலும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

அப்போது தான், போர் நோக்கத்தோடு திரியும் அண்டை நாடுகளும் சரி, "நாம் தான் ராணுவ ஜாம்பவான்" என்று நினைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் பவர் நாடுகளும் சரி - பிற நாட்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்வதோடு சற்று நிதானமாய் யோசிக்கவும் செய்யும். அப்படியாக, இந்தியாவின் மிக நீண்ட நாள் - பாதுகாப்பு - கனவு திட்டம் ஒன்று தற்போது நிஜமாக உள்ளது.

தாக்குதல் ட்ரோன் :

தாக்குதல் ட்ரோன் :

இந்தியாவின் ஆளில்லா தாக்குதல் ட்ரோன்களை சொந்தமாக உருவாக்கும் திட்டம் தான் ப்ராஜக்ட் க்ஹடக் (Project Ghatak).

உளவு :

உளவு :

இவ்வகையான ஆளில்லா உளவு ட்ரோன்கள், அன்மேன்டு காம்பாட் ஏரியல் வெயிக்கல்ஸ் (unmanned combat aerial vehicles - UCAV) என்று அழைக்கப்படும்.

திறன் :

திறன் :

இவ்வகை உளவு ட்ரோன்கள் எதிரிகளின் இலக்குகளை துல்லியமான வழிகாட்டி (precision-guided munitions) மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துவிட்டு மீண்டும் தளங்களுக்கு திரும்பும் திறன் கொண்டவைகள் ஆகும்.

நிதி :

நிதி :

'இந்திய ஆளில்லா ஸ்ட்ரைக் ஏர் வாகனம்' (Indian Unmanned Strike Air Vehicle) திட்டத்ற்க்கு 'ப்ராஜக்ட் கஹடக்' (Project Ghatak) என்ற பெயரின் கீழ் ரூ.2650 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்புதல் :

ஒப்புதல் :

மேலும் இந்த திட்டமானது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) மூலம் ஒப்புதல் வழங்கப்படும் கடைசி நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கம் :

தொடக்கம் :

2009-ஆம் ஆண்டு ரூ.12.50 கோடி செலவில் ஒப்புதல் பெற்று நடத்தப்பட்ட ஆரா (AURA - autonomous unmanned research aircraft) என்ற ஆராய்ச்சி தான் ப்ராஜக்ட் கஹடக்-ன் தொடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசைன் :

டிசைன் :

ஒரு சாராசரி போர் விமானத்தின் எடையை விட குறைவாக டிசைனில் (more of a flying-wing in design) வடிவமைக்கப்பட இருக்கும் இந்த ஆளில்லா உளவு ட்ரோன்கள் அதிக பறக்கும் திறன் கொண்டவைகளாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை :

வலிமை :

அதுமட்டுமின்றி இவ்வகை ஆளில்லா உளவு ட்ரோன்களின் மிகவும் மேம்பட்ட திறன் ஆனது நவீன கால யுத்தங்களின் வலிமை மிக்க தந்திரமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>நேதாஜி பற்றிய மர்மம் : காந்தி மீது பழிபோடும் வலைதளம்..!</strong>நேதாஜி பற்றிய மர்மம் : காந்தி மீது பழிபோடும் வலைதளம்..!

<strong>2015-ஆம் ஆண்டில் நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 10 புரளிகள்..!</strong>2015-ஆம் ஆண்டில் நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 10 புரளிகள்..!

<strong>ஜனவரி 6 ஆம் தேதி இயங்கியது : போட்டுக்கொடுத்த செயற்கைகோள் புகைப்படம்..!</strong>ஜனவரி 6 ஆம் தேதி இயங்கியது : போட்டுக்கொடுத்த செயற்கைகோள் புகைப்படம்..!

<strong>வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!</strong>வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India Is About To Launch A Rs 2,650 Crore Project To Develop Unmanned Attack Drones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X