Home
News

சீறிப்பாயும் உலகின் முதல் ஹை-ஸ்பீட் ஹைட்ரஜன் ரயில்.. தமிழகத்தில் உருவாக்கப்பட்டது.. எந்த வழியில் செல்ல போகுது?

இந்திய ரயில்வே (Indian Railway) தனது முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை விரைவில் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஹைட்ரஜனில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில்களை (Hydrogen train) பல முக்கியமான வழித்தடங்களில் இயக்க இந்திய ரயில்வே தயாராகிவிட்டது என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை (Hydrogen train service) எந்த வழித்தடத்தில், எங்கிருந்து எங்கு செல்லும், எப்போது செல்லும் என்ற தகவல்களை இந்திய ரயில்வே தற்போது பெருமிதத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹைட்ரஜன் டிரைன் குறித்த முழு விபரம் இதோ.

பெட்ரோல் (petrol) தேவையில்லை, டீசல் (disel) தேவையில்லை, அவ்வளவு ஏன் இனி மின்சாரம் (electric current) கூட தேவையில்லை, ஆனாலும் மணிக்கு 140 கிமீ வேகம் (140 Kmph) வரை புயல் போல சீறிப்பாயும் ஹைட்ரஜன் ரயில்களை (Hydrogen train) இந்திய ரயில்வே விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீறிப்பாயும் உலகின் முதல் ஹை-ஸ்பீட் ஹைட்ரஜன் ரயில்.. தமிழ்நாடு கெத்து

இதுவரை உலகளவில் ஜெர்மனி (Germany), ஸ்வீடன் (Sweden), பிரான்ஸ் (France) மற்றும் சீனாவில் (China0) மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஹைட்ரஜன் ரயிலை (hydrogen fuel cell train) பயன்படுத்தும் 5-வது நாடாக இந்தியா (India) பெருமை சேர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்த உலக பெருமையான நிகழ்விற்கு பின்னால் தமிழ்நாடு (Tamil Nadu) ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை (Hydrogen train) சென்னையை தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF தான் உருவாக்கி தயாரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. சரி, ஹைட்ரஜன் ரயில் என்றால் என்ன? இது எப்படி இயங்கும்? இந்தியாவில் இதன் முதல் மக்கள் பயன்பாட்டு சேவை எப்போது துவங்குகிறது? முதல் ஹைட்ரஜன் டிரைன் பயணம் எங்கிருந்து ஏங்குவரை செல்கிறது என்று முழு விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஹைட்ரஜன் ரயில் இந்தியா (India Hydrogen Train):

ஹைட்ரஜன் ரயில் என்பது, சுத்தமான எரிசக்தி ஆதாரமாக பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு (Zero carbon emission) இலக்குகளை ஆதரிக்கும் பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தின் திசையில் பெரிய நன்மைகளை வழங்கும் ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். குறிப்பாக, 2023 முதல் 2024-ம் நிதியாண்டில், ரயில்வே அமைச்சகம் 35 ஹைட்ரஜன் எரிபொருள் செல் அடிப்படையிலான ரயில்களை (hydrogen fuel cell train) உருவாக்க ரூ.2800 கோடியை ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

1 ஹைட்ரஜன் ரயிலை (hydrogen train) உருவாக்க ஏறக்குறைய 80 கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் லோகோமோட்டிவ் வரும் மார்ச் 31, 2025 இறுதிக்குள் தயாரிக்கப்படும் என்று ஐசிஎஃப்-ன் பொது மேலாளர் (GM) யு. சுப்பா ராவ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் உருவாக்கப்படும் புதிய ஹைட்ரஜன் ரயில் மிகவும் (unique Indian hydrogen train) தனித்துவமானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய ஹைட்ரஜன் ரயில் மிகவும் தனித்துவமானது (unique Indian hydrogen train):

காரணம், இதற்கு முன்பு உலகில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைட்ரஜன் ரயில்களை எல்லாம் காட்டிலும் இந்தியாவில் உருவாக்கப்படும் ஹைட்ரஜன் ரயில் அதீத சக்தி கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சினை இந்தியா இப்போது தனது சொந்த முயற்சியால் உருவாக்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் இயக்கப்படும் ஹைட்ரஜன் எஞ்சின்கள் (hydrogen locomotive engine) 500 முதல் 600 ஹார்ஸ்பவர் (Horsepower - HP) வரையிலான திறன் கொண்டவை.

ஆனால், சென்னையில் இறுக்கப்படும் புதிய ஹைட்ரஜன் ரயில் சுமார் 1,200 ஹார்ஸ்பவர் (HP) திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரஜன் எஞ்சினை (hydrogen engine) காட்டிலும், இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஹைட்ரஜன் எஞ்சின் இருமடங்கு சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை வடக்கு ரயில்வே டெல்லி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 89 கி.மீ நீளமுள்ள ஜிந்த்-சோனிபட் (Jind-Sonipat section) பிரிவில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
India Hydrogen Train Coming Soon In Indian Tracks ICF Making 1200HP Power Hydrogen Fuel Train In Chennai Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X