Home
News

உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா.!!

By Meganathan

இந்தியாவில் சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகளவில் வளர்ந்து வருகின்றது. இதே போக்கு இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் சிறு நிறுவனங்களின் போக்கு, அதன் விளைவுகள் குறித்து அனைவரையும் சொக்க வைக்கும் தகவல்களை கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைவர் சமீபத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியா

இந்தியா

உலகளவில் அதிக சிறு நிறுவனங்கள் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்திருக்கின்றது.

உயர்வு

உயர்வு

இந்தியாவில் தற்சமயம் 4,100 சிறு நிறுவனங்கள் இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துவக்கம்

துவக்கம்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொழில்நுட்ப சந்தையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டி கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைவர் ராஜன் ஆனந்தன் இண்டர்நெட் சக்தியுடன் இந்திய பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்சமயம் 4,100 எண்ணிக்கையுடன் உலகளவில் அதிக சிறு நிறுவனங்களை கொண்டிருக்கும் இந்தியாவில் சிறு நிறுவனங்களின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டு வாக்கில் பல ஆயிரம் வரை கூடுதலாக அதிகரிக்கும் என்றும் ராஜன் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

இந்தியாவில் தற்சமயம் சுமார் 300 மில்லியன் இண்டர்நெட் பயனாளிகள் இருக்கின்றர், மேலும் 2017 ஆம் ஆண்டு வாக்கில் 200 மில்லியன் இந்தியர்கள் ஆன்லைன் வருவார்கள் என்றும் 2018 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் எட்டு மில்லியன் இந்திய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றங்களை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இணையதளம்

இணையதளம்

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் வெளிப்படை தன்மையை விரிவாக எடுத்துரைக்கும் பிரத்யேக இணையதளம் ஒன்றை கூகுள் நிறுவனம் துவங்க இருக்கின்றது.

சுந்தர் பிச்சை வருகை

சுந்தர் பிச்சை வருகை

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் இந்திய வருகையின் போது இந்த இணையதளம் துவக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Read here in Tamil about India's current position and detailed information about the Tech startups.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X